இழக்கும்படி செய்த கைகேயி; ஈந்த எல்லாம் - கொடுத்த எல்லாப் பொருளையும்; பூணப் பிறந்தானும் நின்றான் - அணிந்து கொள்ளப் பிறந்தவனாகிய என் தமயனும்இருக்கின்றான்; அவை- அந்தக் காட்சிகளை; போர் விலோடும் - போரில்ஆற்றல் காட்டும் வில்லைச் சுமந்து கொண்டே; காணப் பிறந்தேனும் நின்றேன் -காண்பதற்குப் பிறந்த நானும் இருக்கின்றேனே; அவை காட்டும்’ - அவற்றைக்காண்பியுங்கள்; ‘என்றான் - நாடு இழப்பித்த கைகேயியை ஒன்றும் செய்ய இயலாத எனக்குப் ‘போர் வில்’ எதற்காகஎன்ற தன்னிரக்கமாகக் கூறியது ‘போர்விலோடும்’ என்ற தொடர். 144 | 1750. | அன்னான், அவர் தந்தன, ஆதரத்தோடும் ஏந்தி, இன்னா இடர் தீர்ந்து, “உடன் ஏகு” என, எம்பிராட்டி சொன்னால், அதுவே துணை ஆம்’ என, தூய நங்கை பொன் ஆர் அடிமேல் பணிந்தான்; அவளும் புகன்றாள்; |
அன்னான் - அந்த இலக்குவன்; அவர் தந்தன - அவ் ஏவல் மகளிர் கொடுத்தனவாகிய மரவுரியை; ஆதரத்தோடும் ஏந்தி - அன்போடு பெற்றுக்கொண்டு ; ‘இன்னா இடர் தீர்ந்து - துன்பத் துயரம் நீங்கி; உடன் ஏகு’ என - இலக்குவ! இராமனுடன் நீயும் துணையாக வனம் செல்க என்று; எம்பிராட்டி சொன்னால் - என் தாய்சுமித்திரை சொல்வாளாயின்; அதுவே துணை ஆம்’ - அதுவே எனக்குப் பற்றுக் கோடாகஆகும்; என - என்று நினைத்து; ***தூய மனம் உடைய சுமித்திரையின்; பொன் ஆர்அடி மேல் - பொன் போலப் பொலிந்த பாதத்தின் மேல்; பணிந்தான் -வணங்கினான்; அவளும் புகன்றாள் - அவளும் சில சொற்கள் கொன்னாள்; தாயின் உத்தரவு பெற்று இராமனுடன் செல்லும் ஆசையால் அவள் வாயாலேயே முதலில் அச்சொல்வரவேண்டும் என எதிர்பார்த்துப் பணிகிறான் இலக்குவன். மரவுரிமை ஏற்ற இலக்குவன்குறிப்பறிந்து தாயும் அவனைப் பார்த்துச் சொன்னாள். 145 சுமித்திரை இலக்குவனுக்கு அறிவுரை கூறல் | 1751. | ‘ஆகாதது அன்றால் உனக்கு - அவ் மனம் இவ் அயோத்தி; மா காதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும் |
|