பக்கம் எண் :

270அயோத்தியா காண்டம்

  போகா உயிர்த் தாயர் நம்
     பூங் குழல் சீதை - என்றே
ஏகாய்; இனி, இவ் வயின்
     நிற்றலும் ஏதம்’ என்றாள்.

     (இராமனுக்கு ஆகிய) அவ்வனம் - அந்தக் காடு; உனக்கு ஆகாதது
அன்றால்
-நீ செல்லுதற்குத் தகாதது  அன்று;  இவ் அயோத்தி - இந்த
அயோத்தி மாநகர் போன்றதேஆகும்; மா காதல் இராமன் நம்
மன்னவன்
- சிறந்த அன்பினை உடைய இராமனே (உனக்குஇனி) நம்
மன்னனாகிய தயரதன் ஆம்;  நம் பூங்குழல் சீதை - நம்முடைய பூக்கள்
அணிந்தகூந்தலை உடைய சீதையே; வையம் ஈந்தும் - இராமன் பூமியைப்
பரதனுக்குக் கொடுத்துக்காடு செல்லத் துணிந்த பின்னும்; போகா உயிர்த்
தாயர்
- போகாத  உயிரையுடையதாய்மார்கள் ஆவர்;  என்று - எனக்
கருதி; ஏகாய் - வனத்திற்கு  இராமனுடன்செல்வாயாக; இனி இவ்வயின்
நிற்றலும் ஏதம்’
- இனிமேல்  இங்கே நீ நின்றுதாமதிப்பதும் குற்றமாகும்;
என்றாள் -

     ‘இராமன் இருக்கும் இடம் அயோத்தி’  என்னும்  உலக வழக்கையே
சுமித்திரை மகனுக்குக்கூறினாள்.  இராமனையும் சீதையையும்  தந்தை
தாயாகவும்,  வனத்தை அயோத்தியாகவும்  கருதி இங்குள்ளது  போலவே
வனத்தில்இரு என்றாளாம். ‘என்றே’  ‘ஏ’ காரம் தேற்றம்.           146

1752.பின்னும் பகர்வாள், ‘மகனே!
     இவன்பின் செல்; தம்பி
என்னும்படி அன்று, அடியாரினின்
     ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன்
     வந்திடின், வா; அது அன்றேல்,
முன்னம் முடி’ என்றனள்,
     வார் விழி சோர நின்றாள்.

     பின்னும் - மேலும்;  பகர்வான் - கூறுவாள்;  ‘மகனே! -;
இவன்பின்செல்
- இந்த இராமன் பின்னால் செல்வாயாக;  தம்பி
என்னும்படி அன்று
- இவன்தம்பி என்கின்ற முறையில் நடந்துகொள்ள
அன்று;  அடியாரினின் ஏவல் செய்தி - இவன்தொண்டர்களைப் போல
இவன் இட்ட பணிகளைச் செய்;  மன்னும் நகர்க்கே - நிலைபெற்ற
அயோத்தி நகரத்துக்கு;  இவன் வந்திடின் வா - இவன் திரும்பி
வருவானாயின் நீயும்வருக;  அது  அன்றேல் - இவன் அயோத்திக்கு
வரமுடியாமல் போகுமானால்;  முன்னம் முடி’- இவனுக்கு முன்னம் நீ
உயிரைத் துறந்துவிடு;’  என்றனள் - என்று