பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 271

கூறி வார் விழி சோர நின்றாள்- நீண்ட கண்களிலிருந்து  நீர் பெருக
நின்றாள்.

     சுமித்திரை தன் மகனுக்குத் தந்த இவ் அறிவுரை நினைக்க நினைக்கப்
பெருமிதம் தருவதாகும். இராமனுக்கு ஏதேனும் ஆபத்து வரின் அதனைத்
தடுக்க உன் உயிரை விடவும் தயங்காதேஎன்றாள்,  ‘முன்னம் முடி’  என்ற
சொல்லால். ‘இந் நெடுங் சிலைவலானுக்கு ஏவல் செய அடியன்யானே’
என்று (3778.) அனுமனிடம் இலக்குவன் பின்னர்த் தன்னை அறிமுகப்
படுத்திக்கொள்வதும் காண்க.                                  147

இராம இலக்குவர் சுமித்திரையிடம் விடைபெறல்  

கலிவிருத்தம்

1753. இருவரும் தொழுதனர்; இரண்டு கன்று ஒரீஇ
வெருவரும் ஆவினின் தாயும் விம்மினாள்;
பொரு அருங் குமரரும் போயினார் - புறம்
திரு அரைத் துகில் ஒரீஇ, சீரை சாத்தியே.

     இருவரும் தொழுதனர் - இராம இலக்குவர்கள் இருவரும் (தாயை)
வணங்கினர்;  தாயும் -சுமித்திரையும்;  இரண்டு கன்று ஒரீஇ வெருவரும்
ஆவினின்
- இரண்டு கன்றுகளை நீங்கிஅஞ்சுகின்ற பசுப்போல; 
விம்மினாள் - மனம் கலங்கித் துடித்தாள்;  பொரு அரும்குமரரும் -
ஒப்பற்ற மைந்தர்களும்; புறம் திரு அரைத் துகில் ஒரீஇ, சீரைசாத்திப்
போயினார்
- உடம்பின் வெளியே அழகிய இடுப்பில் அணிந்திருந்த
மெல்லிய ஆடைகளை நீக்கிமரவுரியைத் தரித்துக் கொண்டு சென்றார்கள்.

     இரண்டு கன்றுகளைப் பிரிந்த பசுத் துடிக்குமாறு போல இராமனையும்
இலக்குவனையும்பிரிகின்ற சுமித்திரை  விம்முகிறாள். ‘திரு அரைத்துகில்
ஓரீஇ  புறம் சீரை சாத்தி’  எனஇயைக்கலாம். ‘ஏ’ காரம் ஈற்றசை.     148

    இலக்குவனைப் பெற்றோருடன் இருக்க இராமன் கூறுதல்  

1754.தான் புனை சீரையைத் தம்பி சாத்திட,
தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான்;
‘வான் புனை இசையினாய்! மறுக்கிலாது, நீ
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள்’ எனா,

     தான் புனை சீரையை - (இராமன்) தான் அணிந்துள்ளது  போன்ற
மரவுரியை;  தம்பி சாத்திட - தம்பியாகிய இலக்குவனும் அணிந்துகொள்ள;
தேன் புனை தெரியலான்செய்கை நோக்கினான் - தேன் நிறைந்த
மாலை அணிந்த  இலக்குவனின் செயலை இராமன்