பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 631

     மீண்டும் தொடர்ந்து சென்ற இராமலக்குவர் வானத்தில் சஞ்சரிக்கும்
சூரிய சந்திரரும் பிற கோள்களும் ஒளியுடன் நிலத்தில் விழுந்தது போல
விழுந்து கிடந்த இராவணனது மார்புக் கவசத்தைக் கண்டனர். மறித்தும் -
மீண்டும். வயங்குற - விளக்கமாக                               87

3490.கான் கிடந்தது மறைதர,
     கால் வயக் கலிமாத்
தான் கிடந்துழிச் சாரதி
     கிடந்துழிச் சார்ந்தார்;
ஊன் கிடந்து ஒளிர் உதிரமும்
     கிடந்துளது; உலகின்
வான் கிடந்தது போல்வது
     கிடந்துழி வந்தார்.

    கான் கிடந்தது மறைதர - காடு உள்ள இடம் முழுவதும்
மறையும்படி; கால் வயக் கலிமாத் தான் கிடந்துழி - காற்றுப் போல்
விரைந்து செல்லும் வலிமை படைத்த கடிவாளத்தைப் பூண்ட குதிரைகள்
விழுந்து கிடந்த இடத்தையும்; சாரதி கிடந்துழிச் சார்ந்தார் - சாரதி
விழுந்து கிடந்த இடத்தையும் சென்று அடைந்தார்கள்; ஊன் கிடந்து ஒளிர்
உதிரமும் கிடந்துளது -
அந்த இடத்தில் தசையோடு பொருந்தி
விளங்குகிற குருதி சிந்திக் கிடந்தது; உலகின் வான் கிடந்தது போல்வது
கிடந்துழி -
நில உலகில் (சூரிய சந்திரரும் நட்சத்திரங்களும் உடைய)
வானம் கிடந்தது போல் (இராவணனது ஒளியுடை அணிகலன்கள் பல
கிடந்த இடத்திற்கு; வந்தார் - வந்தனர்.

     தொடர்ந்து சென்ற இராமலக்குவர் குதிரைகள் விழுந்து கிடந்ததையும்,
தேர்ப் பாகன் இறந்து கிடந்ததையும், ஒளியுள்ள பல அணிகலன்கள் சிந்திக்
கிடந்ததையும் கண்டனர். கால் - காற்று, வயக்கலிமா - வலிமை படைத்த
கடிவாளத்தை உடைய விலங்கு.                                 88

3491. கண்டு, அலங்கு தம் கைத்தலம்
     விதிர்த்தனர்-கவின் ஆர்
விண்தலம் துறந்து, இறுதியின்
     விரி கதிர் வெய்யோன்
மண்டலம் பல மண்ணிடைக்
     கிடந்தென, மணியின்
குண்டலம் பல, குலமணிப்
     பூண்களின் குவியல்

    இறுதியின் - உலக இறுதிக் காலத்தில்; விரிகதிர் வெய்யோன்
மண்டலம் பல -
ஒளி வீசுகிற சூரிய மண்டலங்கள் பல; கவின்ஆர்
விண்தலம் துறந்து -
அழகுடைய வானத்தின் இடத்தை விட்டு நீங்கி;
மண்ணிடைக் கிடந்தென-