பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 645

வெங்கதிர்ச் செல்வனை
     விழுங்கி நீங்குமால்;
அம் கண் மா ஞாலத்தை
     விளக்கும் ஆய் கதிர்த்
திங்களும், ஒரு முறை
     வளரும் தேயுமால்.

    பொங்கு வெங்கோள் அரா - (சினம்) பொங்குகிற கொடிய
கொலைத் தொழிலை உடைய பாம்பாகிய (கேது); விசும்பு பூத்தன -
ஆகாயத்தில் பூத்து விளங்குகிற; வெங்கதிர்ச் செல்வனை - வெப்பக்
கதிர்களைச் செல்வமாகக் கொண்ட கதிரவனை; விழுங்கி நீங்குமால் -
விழுங்கி உமிழும்; அம் கண் மா ஞாலத்தை - இடம் அகன்ற பெரிய
நிலவுலகத்தை; விளக்கும் - தன் ஒளியால் விளங்கச் செய்கிற; ஆய்கதிர்த்
திங்களும் -
சிறந்த ஒளிக்கற்றைகளை உடைய நிலவும்; ஒரு முறை
வளரும் தேயும் -
(மாதந்தோறும்) ஒரு முறை வளர்ந்து, ஒரு முறை
தேய்தலும் செய்யும்.

     கதிரவனைக் கோள் அராத் தீண்டி மறைத்தலும், நிலவு வளர்ந்து
தேய்வதும் விதியின் பயன் என்றவாறு. கதிரவனை அராத் தீண்டுதற்குக்
காரணமாகப் புராணக் கதையைக் குறிப்பிடுவர். கோள் அரா - குறித்த
இலக்கைக் கொல்வதில் தவறாத பாம்பு, கோள் - முதல் நிலை நீண்ட
தொழிற் பெயர். மாஞாலம்- உரிச்சொல் தொடர். ஆல் இரண்டும் அசை. 109

3512.'அந்தரம் வருதலும்,
     அனைய தீர்தலும்,
சுந்தரத் தோளினிர்!
     தொன்மை நீரவால்;
மந்திர இமையவர்-குருவின்
     வாய் மொழி
இந்திரன் உற்றன
     எண்ண ஒண்ணுமோ?

    சுந்தரத் தோளினிர் - அழகிய தோள்களை உடையவர்களே;
அந்தரம் வருதலும் - (ஒருவனுக்குத்) தீங்குகள் வந்து சேர்வதும்;
அனைய தீர்தலும் - அவை நீங்குவதும்; தொன்மை நீரவால் - தொன்று
தொட்டு வந்தமைகிற ஊழ்வினையின் தன்மையவாகும்; இமையவர் மந்திர
குருவின் -
தேவர்களுடைய மந்திரவலிமை மிக்க குருவாகிய பிரகசுபதியின்;
வாய்மொழி - வாயில் இருந்து வந்த சாபச் சொற்களால்; இந்திரன்
உற்றன-
தேவர் தலைவனாகிய இந்திரன் அடைந்த துன்பங்களை; எண்ண
ஒண்ணுமோ -
எண்ணிப் பார்க்க முடியுமோ என்றபடி (முடியாது என்பது
கருத்து)