தொன்று தொட்டு வருகின்ற ஊழ்வினையின் பயனால் தான் ஒருவனுக்குத் துன்பங்கள் வந்து சேருகின்றன. இதை விளக்க இந்திரன் பட்ட துன்பங்களைக் கூறும் புராணச் செய்தி கூறப்படுகிறது. அந்தரம் - துன்பம், நீங்கு, நீரவால் - தன்மையவாம் அனைய, உற்றன - வினையாலணையும் பெயர்கள். இமையவர் குரு - பிரகஸ்பதி. 110 | 3513. | 'தடைக்க அரும் பெரு வலிச் சம்பரப் பெயர்க் கடைத் தொழில் அவுணனால், குலிசக்கையினான் படைத்தனன் பழி; அது, பகழி வில் வலாய்! துடைத்தனன் நுந்தை, தன் குவவுத் தோளினால். |
பகழி வில் வலாய் - அம்புகளை விடும் வில் தொழில் ஆற்றலில் வல்லவனே!; தடைக்க அரும் பெருவலி - தடுப்பதற்கு முடியாத மிக்க வலிமை உடைய; சம்பரப் பெயர் - சம்பரன் என்ற பெயர் உடைய; கடைத் தொழில் அவுணனால் - இழி தொழிலைச் செய்யும் அவுணனால்; குலிசக்கையினான் - வச்சிராயுதத்தைக் கையில் ஏந்திய இந்திரன்; பழி படைத்தனன் - (தோல்வி அடைந்து ஆட்சியை இழத்தலாகிய) பழியை அடைந்தான்; அது - அப்பழியை; நுந்தை - உன் தந்தையாகிய தசரதன்; தன் குவவுத் தோளினால் - தன் திரண்ட தோள்களின் வலிமையால்; துடைத்தனன் - நீக்கினான். இந்திரன் சம்பரன் என்ற அசுரனால் அடைந்த பழியை உன் தந்தையாகிய தசரதன் தன் தோள் வலிமையால் போக்கினான் என்பது கருத்து. தடைக்க - தடுக்க, கடைத் தொழில் - கீழான தொழில், குலிசம் - வச்சிராயுதம், நுந்தை - உன் தந்தை தசரதன், குவவு - திரட்சி. 111 அறுசீர் ஆசிரிய விருத்தம் | 3514. | 'பிள்ளைச் சொல் கிளிஅனாளைப் பிரிவுறல் உற்ற பெற்றி, தள்ளுற்ற அறமும் தேவர் துயரமும், தந்ததேயால்; கள்ளப் போர் அரக்கர் என்னும் களையினைக் களைந்து வாழ்தி; புள்ளிற்கும், புலன்இல் பேய்க்கும், தாய் அன்ன புலவு வேலோய்! |
புள்ளிற்கும் - பறவைகளுக்கும்; புலன் இல் பேய்க்கும் -பகுத்தறிவு இல்லாத பேய்க்கும்; தாய் அன்ன - (உணவு தருவதால்)தாயைப் |