| தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை; பின் தவிரப் போனால், முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை, பொற்- கூடம் சென்று உறுதி, மொய்ம்ப! | மொய்ம்ப - வலிமையுடைய அனுமனே! இக்கடல் பின்பு உளது என்னப் பெயர்ந்ததற்பின் - இத்தென்கடல் பின்புளது என்னுமாறு கடந்து சென்றபின்; பேசநின்ற யோசனைகள் ஒன்பதினாயிரம் கடந்தால் - கண்டோர் சொல்லும்படி நின்ற யோசனைகள் ஒன்பதினாயிரம் கடந்தால்; இமயம் எனும் குலவரையை உறுதி; உற்றால் - இமயம் என்கின்ற சிறந்த மலைக்கூட்டத்தை அடைவாய்; அங்ஙனம் அடைந்தால்; தன் பெருமை ஓர் இரண்டாயிரம் யோசனை உளது - அந்த இமயத்தின் பரப்பு இரண்டாயிரம் யோசனை உளது; பின் தவிரப் போனால் - அது பின்நிற்க முற்பட்டுச் சென்றால்; முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை பொற்கூடம் சென்று உறுதி- நின் முன்பு உள்ள யோசனைகள் எல்லாவற்றையும் கடந்து போனால், ஏமகூட மலையைச் சென்று அடைவாய். | (24) | | 8727. | ‘அம் மலைக்கும் ஓன்பதினாயிரம் உளதால், யோசனையின் நிடதம் என்னும் செம் மலையம்; உளவாய அத்தனை யோசனை கடந்தால், சென்று காண்டி, எம் மலைக்கும் பெரிது ஆய வடமலையை; அம் மலையின் அகலம் எண்ணின், மொய்ம் மலைந்த திண் தோளாய்! முப்பத்து ஈர்- ஆயிரம் யோசனையின் முற்றும்; | மொய்ம் மலைந்த திண்தோளாய் - வலிமைமேவிய திண்மையான தோளினை உடையவனே! அம்மலைக்கும் ஒன்பதினாயிரம் யோசனையின் - அந்த ஏமகூட மலையிலிருந்து ஒன்பதினாயிரம் யோசனைத் தொலைவில்; நிடதம் என்னும் செம்மலையம் உளதால்- நிடதம் என்னும் செம்மலை உளது; உளவாய அத்தனை யோசனை கடந்தால் - அச் செவ்விய நிடத மலையிலிருந்து ஒன்பதினாயிரம் யோசனை கடந்து போனால்; எம்மலைக்கும் பெரிது ஆய வடமலையை, சென்று காண்டி - எல்லா மலைகளுக்கும் பெரிதாகிய மேருமலையைச் சென்று காண்பாய்; |
|
|
|