அம்மலையின் அகலம் எண்ணின் முப்பத்து ஈர்ஆயிரம் யோசனையின் முற்றும் - அம்மேருமலையின் அகலம் எண்ணினால் முப்பத்து இரண்டாயிரம் யோசனையில் முடிவு அடையும். | (25) | | 8728. | மேருவினைக் கடந்து, அப்பால் ஒன்பதினாயிரம் உள ஓசனையை விட்டால், நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டா- யிரம் உள யோசனையின் நிற்கும்; மாருதி! மற்று அதற்கு யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும், கார் வரையைக் காணுதி; மற்று, அது காண, இத் துயர்க்குக் கரையும் காண்டி; | மாருதி - ‘அனுமனே! மேருவினைக் கடந்து - மேருமலையினைக் கடந்து; அப்பால் ஒன்பதினாயிரம் உள ஓசனையை விட்டால் - அப்பால் உள்ள ஒன்பதினாயிரம் யோசனையைக் கடந்தால்; நேர் நீலகிரி அணுகும் - நினக்குநேராக நீலகிரி என்னும் மலைநெருங்கித் தோன்றும்; தான் இரண்டாயிரம் உளயோசனையின் நிற்கும் - அந்நீலகிரிதான் இரண்டாயிரம் ஆக உள்ள யோசனை அளவில் பரவி நிற்கும்; மற்று அதற்கு யோசனை நாலாயிரத்தின் - அந்நீலகிரிக்கு யோசனை நாலாயிரத்துக்கு அப்பால்; மருந்து வைகும் கார் வரையைக் காணுதி - மருந்து தங்கியுள்ள கரிய மருத்துமலையைக் காண்பாய்; மற்று, அதுகாண, இத் துயர்க்கும் கரையுங் காண்டி - அம்மலையைக் காணவே இத் துயர்க்கு எல்லையுங் காண்பாய்’. | (26) | | 8729. | ‘மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும், உடல் வேறு வகிர்களாகக் கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும், படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும், மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும் உள; நீ, வீர! ஆண்டு ஏகி, கொணர்தி’ என அடையாளத்தொடும் உரைத்தான், அறிவின் மிக்கான். |
|
|
|