பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 657

அடிக்கையில்;      அன்னவை  கண்டு,  உயாவுதலும்   -     அம்
மருந்தினைக் கண்டு  அவற்றைப் பற்றிக் கேட்டபோது; தொல் முனிவர்
அவற்று இயல் எற்கு  அறிவித்தாரால்
   - பழமைசான்ற முனிவர்கள்
அவற்றின் பண்புகளை எனக்குத் தெரிவித்தனர். ஆல் - அசை.
 

                                                (28)
 

8731.

‘இம் மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால்;
                                   இரங்கா, யார்க்கும்;
நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமிப்
             படையும் அவற்றுடனே நிற்கும்;
பொய்ம் மருங்கின் நில்லாதாய்! புரிகின்ற
               காரியத்தின் பொதுமை நோக்கி,
கைம் மருங்கு உண்டாம்; நின்னைக் காவாய் என்று;
                  அப்புறம் போய்க் கரக்கும்’ என்றான்.
 

இம் மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால்-இந்த
மருந்தைக்  காத்துக்  கொண்டிருக்கும்    தெய்வங்கள்  கணக்கிலாதன;
யார்க்கும்  இரங்கா  -  அவை  யார்க்கும்  இரக்கம் கொள்ளமாட்டா;
நெய்ம் மருங்கு படரகில்லா நெடுநேமிப்  படையும்  அவற்றுடனே
நிற்கும்
 -  நெய்பூசப் பெற்றதும்,  அருகில் செல்வதற்கும் இயலாததும்
ஆகிய  நெடிய சக்கரப்படையும்   அத்தெய்வங்களுடன் காத்து நிற்கும்;
பொய்ம்   மருங்கின்  நில்லாதாய்  -   பொய்யின்  அருகில்  கூட
நில்லாதமெய்மை     உடையவனே!   புரிகின்ற        காரியத்தின்
பொதுமைநோக்கி
 -  நீ  செய்கின்ற  செயலின் பொதுத்தன்மையினை
நோக்கி;  கைம்  மருங்கு  உண்டாம்  -  நின்  கையருகில்  நிற்கும்;
நின்னைக் காவாய் என்று அப்புறம் போய்க்கரக்கும்   என்றான் -
(மேலும்)  உன்னை,  ‘இம்  மருந்தை  மீட்டும் கொணர்ந்து   கெடாமல்
காப்பாயாக’  எனக்  கேட்டுக்  கொண்டு  அப்புறம்  போய்   மறைந்து
கொள்ளும்’. என்று கூறினான்.
 

                                                (29)
 

           அனுமன் மருந்து கொணரப் பெருவடிவு கொண்டு எழுதல்
 

8732.

‘ஈங்கு இதுவே பணி ஆகில், இறந்தோரும்
பிறந்தோரே; எம் கோற்கு யாதும்
தீங்கு இடையூறு எய்தாமல், தெருட்டுதிர், போய்’
எனச் சொல்லி, அவரைத் தீர்ந்தான்-