ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன்; பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்க வீங்கின; ஆகாயத்தை விழுங்கினனே என வளர்ந்தான்-வேதம் போல்வான்.
‘ஈங்கு இதுவே பணி ஆகில் இறந்தோரும் பிறந்தோரே - “இப்பொழுது இதுவே (நான் செய்ய வேண்டிய) பணி ஆனால் இறந்துகிடப்பவர்கள் அனைவரும் மீண்டும் இறப்பு நீங்கி எழுந்தவரே ஆவர்” எம்கோமாற்கு யாதும் தீங்கு இடையூறு எய்தாமல் - எம்கோமானாகிய இராமனுக்கு தீங்குவரத்தக்க இடையூறு ஏதும் எய்தாதபடி; தெருட்டுதிர்போய் எனச் சொல்லி - போயத் தெளிவுபடுத்துங்கள்” எனக் கூறி; அவரைத் தீர்ந்தான், வேதம் போல்வான் - அவர்களை விட்டு நீங்கினவனாய்; வேதம் போல்பவனாகிய அனுமன்; ஓங்கினன் வான் நெடுமுகட்டை உற்றனன் - உயர ஓங்கி வானத்தின் நெடிய முகட்டை அடைந்தான்; பொன்தோள் இரண்டும் திசையோடு ஒக்க வீங்கின- அவன் தோள்கள் இரண்டும் திசைகளின் அளவோடு ஒக்கப் பருத்தன; ஆகாயத்தை விழுங்கினனே என வளர்ந்தான் - ஆகாயத்தை இடமில்லாமல் விழுங்கிவிட்டான் என்னுமாறு பேருரு எடுத்து வளர்ந்தான்.
(30)
8733.
கோளோடு தாரகைகள், கோத்து அமைந்த மணி ஆரக் கோவை போன்ற; தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை அளவு சொல்ல ஒண்ணா; தாளோடு தாள் பெயர்க்க, இடம் இலது- ஆயின இலங்கை; தடக் கை வீச, நீளோடு திசை போதா; விசைத்து எழுவான் உருவத்தின் நிலை ஈது அம்மா!
கோளோடு தாரகைகள் கோத்து அமைந்த- விண்ணில் விளங்கும் நவகோள்களும் நட்சத்திரங்களும் (அனுமனது மார்பிற்கு அணியாகக்) கோத்து அமைத்த; மணி ஆரக்கோவை போன்ற - மணியும் முத்தும் கலந்த மாலை போன்று விளங்கின; தோளோடு தோள் அகலம் - ஒருதோளிலிருந்து மற்றொரு தோளுக்கு உள்ள அகலம்; ஆயிரம் யோசனை அளவு சொல்ல ஒண்ணா - ஆயிரம் யோசனை அளவு எனவும் சொல்ல