பக்கம் எண் :

660யுத்த காண்டம் 

பொழிந்தன, மீன்; தொடர்ந்து எழுந்த, பொருப்புஇனமும்,
             தருக் குலமும், பிறவும், பொங்கி;
அழிந்தன, வானவர் மானம், ஆகாயத்து
             இடையன பேர் அசனி என்ன
விழுந்தன, நீர்க் கடல் அழுந்த; ஏறின மேல்,
             கீறின போய்த் திசைகள் எல்லாம்.
 

மாமழைக்குலங்கள் கிழிந்தன - (அனுமன் விசைத்தெழவே) பெரிய
மேகக்கூட்டங்கள்  கிழிந்தன; நீண்டகல்  வேலை கிழக்கும் மேற்கும்
கீண்டது
 -  நீண்டு   அகன்றுள்ள  தென்கடல்  கிழக்கும் மேற்குமாக
பிரிந்து  கிழிந்தது;   மீன்  பொழிந்தன;  -  விண்மீன்கள் உதிர்ந்தன;
பொருப்பு  இனமும்   தருக்குலமும் பிறவும், பொங்கி தொடர்ந்து
எழுந்த
- மலைத்தொகுதிகளும்,  மரத்தொகுதிகளும், பிறவும் கிளர்ந்து
தொடர்ந்து   எழுந்தன;  வானவர்  மானம்  ஆகாயத்து  இடையன
அழிந்தன
   -   தேவர்களின்   விமானம்   ஆகாயத்தின்   நடுவே
அழிந்தனவாய்; பேர் அசனி என்ன நீர்க் கடல் அழுந்த  விழுந்தன
-பெரிய  இடியைப் போல நீர்க்கடலில் அழுந்த விழுந்தன; மேல் ஏறின
போய்த்திசைகளெல்லாம்  கீறின
-  அதனால்  கடல்நீர் மேல் ஏறின
வாய்த் திசைகளெல்லாம் கிழிந்தன.
 

                                               (33)
 

8736.

பாய்ந்தனன், அங்கு அப்பொழுதத்தே; பரு வரைகள்
                     எனைப் பலவும் வடபாகத்துச்
சாய்ந்தன; ‘பேர் உடல் பிறந்த சண்டமா-
                   ருதம் வீச, தாதை சால
ஓய்ந்தனன்’ என்று உரைசெய்ய, விசும்பூடு
                   படர்கின்றான், உரு வேகத்தால்,
காய்ந்தன வேலைகள்; மேகம் கரிந்தன; வெந்து
                   எரிந்த, பெருங் கானம் எல்லாம்.
 

அப்பொழுதத்தே  அங்கு பாய்ந்தனன் - அப்பொழுதே   அங்கு
பாய்ந்தனன்; பருவரைகள் எனைப் பலவும் - பருத்தமலைகள் பலவும்;
பேர்  உடல்  பிறந்த  சண்டமாருதம்  வீச- பெரிய  உடலிலிருந்து
தோன்றிய   பெருங்காற்று   வீசுதலால்;  வடபாகத்துச்  சாய்ந்தன -
வடக்குப் பக்கமாகச்  சாய்ந்தன;  தாதைசால  ஓய்ந்தனன்    என்று
உரைசெய்ய
 -  தந்தையான  வாயுதேவனும் மிகவும்  தளர்ச்சியுற்றான்
என்று சொல்லுமாறு; விசும்பூடு படர்கின்றான்