பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 661

உருவேகத்தால் -  விரைந்து   விண்வழியே  செல்கின்ற  உருவத்தின்
வேக வெப்பத்தால்; வேலைகள் காய்ந்தன மேகம்  கரிந்தன-கடல்கள்
வறண்டு   காய்ந்தன; மேகங்கள் கரிந்து  போயின;     பெருங்கானம்
எல்லாம் வெந்து எரிந்த
- பெரிய காடுகள் எல்லாம் வெந்து எரிந்தன.
 

                                                (34)
 

8737.

கடல் முன்னே நிமிர்ந்து ஓட, கால் பின்னே
    தொடர்ந்து ஓட, கடிதின் செல்வான்
உடல் முன்னே செல, உள்ளம் கடைக் குழையாய்ச்
    செல, செல்வான் உருவை நோக்கி,
‘அடல் முன்னே தொடங்கிய நாள், ஆழ் கடல் சூழ்
    இலங்கை எனும் அரக்கர் வாழும்
திடல் முந்நீர்இடைப் படுத்து மறித்தலின்; நம்
    துயர்’ என்றார், தேவர் எல்லாம்.
 

கடல் முன்னே நிமிர்ந்து ஓட- கடல்  முன்னால் நிமிர்ந்து ஓடவும்;
கால்பின்னே தொடர்ந்து ஓட-கால்கள்  பின்னால் தொடர்ந்து ஓடவும்;
கடிதின்செல்வான்  உடல்  முன்னே   செல -  விரைந்து  செல்லும்
பொருட்டு உடல் முன்னே செல்லவும்; உள்ளம் கடைக்குழையாய் செல
-  மனம்  கடைசியாக   வேகங்   குறைந்ததாகப்   பின்னே செல்லவும்;
செல்வான்  உருவை   நோக்கி  -  செல்கின்றவனாகிய  அனுமனின்
உருவத்தைப்  பார்த்து; தேவர் எல்லாம் அடல்முன்னே தொடங்கிய
நாள்
   -    தேவர்கள்   அனைவரும்   ‘அரக்கரைக்    கொல்லும்
போர்த்தொழிலை   முன்னே  தொடங்கிய  நாளில்;  ஆழ்கடல்  சூழ்
இலங்கை  என்னும்
 -  ஆழ்ந்த  கடலால்  சூழப்  பெற்ற  இலங்கை
என்னும்; அரக்கர் வாழும்  திடல் முந்நீர் இடைப்படுத்து - அரக்கர்
வாழ்கின்ற தீவினை எடுத்துச் கடலிடை வீழ்த்தி; நம்துயர் மறித்திலன்
என்றார்
- நம் துயரைத்தடுத்திலனே” என்று கூறினர்.
 

“திடல்    முந்நீர்க் கிடை அறிந்தான்; முரிந்தது” என்ற இறுதி அடி,
“திடல்  முந்நீர்  இடைப்படுத்து மறித்திலன்” என்று பாடம் கொள்ளப்
பெற்றது.
 

                                                (35)
 

              விரைந்து செல்லும் அனுமனைக்கண்ட வானவர் கூற்று
 

8738.

மேகத்தின் பதம் கடந்து, வெங் கதிரும்
தண் கதிரும் விரைவில் செல்லும்