பக்கம் எண் :

662யுத்த காண்டம் 

மாகத்தின் நெறிக்கு அப்பால், வானமீன்
    குலம் விளங்கும் வரம்பு நீங்கி,
போகத்தின் நெறி கடந்தார் புகலிடங்கள்
    பிற்படப் போய், ‘பூவின் வந்த
ஏகத்து அந்தணன் இருக்கை இனிச் சேய்த்து அன்-
    றாம்’ என்ன, எழுந்து சென்றான்.
 

மேகத்தின  பதம்   கடந்து  -   மேகமண்டலத்தைக்    கடந்து;
வெங்கதிரும் தண்கதிரும்  விரைவில்  செல்லும்  -  வெப்பம்மிக்க
கிரணங்களை  உடைய  சூரியனும்,    குளிர்ந்த  கிரணங்களை உடைய
சந்திரனும்  விரைந்து  செல்லுகின்ற; மாகத்தின் நெறிக்கு அப்பால் -
வான வழிக்கு அப்பால்; வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி -
விண்மீன்களின்  கூட்டம்  இயங்குகின்ற  நட்சத்திர   மண்டலத்தையும்
கடந்து சென்று; போகத்தின்      நெறிகடந்தார்     புகலிடங்கள்
பிற்படப்போய்
-மகளிரோடு கலந்து துய்க்கும் போகத்தின்  நெறியையே
கடந்தவர்களான   தவத்தினரின்   தவலோகம்   பிற்படுமாறு  சென்று;
பூவின்   வந்த   ஏகத்து   அந்தணன்  இருக்கை  -  திருமாலின்
உந்திக்கமலத்தில்      தோன்றியவனாகிய   பிரமனது   இருக்கையான
சத்தியலோகம்; இனிச் சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான்
-  இனிச்சேயது  அன்று  (அண்மையதே)  என்று கூறுமாறு உயர்ந்து
சென்றான். (அனுமன்)
 

                                                (36)
 

8739.

வான நாட்டு உறைகின்றார், ‘வயக் கலுழன்
    வல் விசையால், மாயன் வைகும்
தான் நாட்டு எழுகின்றான்’ என்று உரைத்தார்,
    சிலர்; சிலர்கள், ‘விரிஞ்சன்தான் தன்
ஏனை நாட்டு எழுகின்றான்’ என்று உரைத்தார்;
    சிலர் சிலர்கள், ‘ஈசன் அல்லால்,
போன நாட்டிடை போக வல்லாரோ?
    இவன் முக் கண் புனிதன்’ என்றார்.
 

வானநாட்டு உறைகின்றார் சிலர்- வான நாட்டில் வாழ்கின்றவர்கள்
சிலர்;  ‘வயக்கலுழன்   வல்விசையால்’   -   வலிமைமிக்க  கருடன்
வலியவேகத்தோடு; மாயன்வைகும் தான நாட்டு எழுகின்றான்’ என்று
உரைத்தார்
  - திருமால்   தங்கியுள்ள  இடமாகிய  வைகுந்தத்திற்குச்
செல்கின்றான்’ என்று  சொன்னார்கள்; சிலர்கள் ‘விரிஞ்சன் தான்தன்
ஏனைநாட்டு