பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 663

எழுகின்றான்’  என்று  உரைத்தார் - வேறுசிலர்  ‘பிரமன்தான்  தன்
நாட்டிலும்   வேறாகிய    நாட்டிற்குச்  செல்ல  எழுகின்றான்’   என்று
சொன்னார்கள்; சிலர்சிலர்கள் ‘ஈசன்  அல்லால் போன நாட்டிடைப்
போகவல்லாரோ?
  -  சிலர்சிலர்,  ‘சிவன்  அல்லாதவர்கள்,  மிகவும்
உயர்ந்து   போன    நாட்டிடையே  செல்லவல்லவர்களோ?  (அல்லர்!
ஆதலின்);  இவன் முக்கண்  புனிதன்’  என்றார்  -  இவன், மூன்று
கண்களையுடைய தூயவனாகிய சிவனே’ என்று சொன்னார்கள்.
 

                                                (37)
 

8740.

‘வேண்டு உருவம் கொண்டு எழுந்து, விளையாடு-
       கின்றான்; மெய் வேதம் நான்கும்
தீண்டு உருவன் அல்லாத திருமாலே
       இவன்’ என்றார்; ‘“தெரிய நோக்கிக்
காண்டும்” என இமைப்பதன்முன், கட் புலமும்
       கடந்து அகலும்; இன்னும் காண்மின்;
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம்
       புகும்’ என்றார், மேன்மேல் உள்ளார்.

 

மேன்மேல்   உள்ளார் - மேல்மேல் உள்ள உலகத்தவர்கள் சிலர்;
வேண்டு  உருவம் கொண்டு எழுந்து விளையாடுகின்றான் இவன் -
விரும்பிய       உருவந்தாங்கி    விளையாடுகின்றவனாகிய    இவன்;
மெய்வேதம்   நான்கும்   தீண்டு   உருவன் அல்லாத திருமாலே
என்றார்
- உண்மையான வேதங்கள் நான்கும் எட்டுதற்குரிய வடிவினன்
அல்லாத திருமாலே’  என்றார்; ‘தெரிய  நோக்கிக்  காண்டும்’  என
-(சிலர்)     ‘தெளிவுற    நோக்கிப்     பார்ப்போம்’ என்று நினைக்க;
‘இமைப்பதன் முன்கட்புலமும்  கடந்து  அகலும்   -  (அவர்களின்)
இமைப்பொழுதிற்கு முன்னமே  கட்புலத்தைக்  கடந்து     செல்லுவான்;
இன்னும் காண்மின் மீண்டு வரும் தரம் அல்லன் வீட்டுலகம் புகும்
என்றார்
-(மற்றும் சிலர்)  ‘இன்னும்   பாருங்கள்  இவன்  திரும்பிவரும்
தன்மையன் அல்லன், வீட்டுலகத்திற்குச் செல்லுவான்’ என்றார்.
 

                                                (38)
 

8741.

‘உரு’ என்றார், சிலர் சிலர்கள்; ‘ஒளி’ என்றார்,
      சிலர் சிலர்கள்; ‘ஒளிரும் மேனி
அரு’ என்றார், சிலர் சிலர்கள்; ‘அண்டத்துக்கு
      அப் புறம் நின்று, உலகம் ஆக்கும்