பக்கம் எண் :

666யுத்த காண்டம் 

தூவின மணியும் சாந்தும் சுண்ணமும் மலரும் தொத்த,
பூவுடை அமரர் தெய்வத் தரு என, விசும்பில் போனான்.

 

தேவரும்  முனிவர்    தாமும்  சித்தரும்    தெரிவைமாரும்-
தேவர்களும்,  முனிவர்களும்,  சித்தர்களும்  அவர்தம்   மனைவிகளும்;
மூவகை உலகினுள்ளார் உவகையால்  தொடர்ந்து   மொய்த்தார்-
மூவுலகத்திலுள்ளவர்களும்  மகிழ்ச்சி  மிகுதியால்  தொடர்ந்து  வானில்
நெருங்கியவர்களாய்த்; தூவின மணியும் சாந்தும் கண்ணமும் மலரும்
தொத்த
-  தூவிய    மணிகளும்,   சந்தனமும்,    சுண்ணப்பொடியும்
மலர்களும்  அனுமனின்  உடல்மேல்  தொத்தி நிற்க;  பூவுடை அமரர்
தெய்வத்  தருஎன விசும்பில் போனான்
-தேவர்களுக்குரிய,  மலர்கள்
நிறைந்ததெய்வத்தன்மையுடைய    கற்பகத்தரு   என     வான்வழியே
சென்றான்.
 

                                                (42)
 

                 கயிலையைக் கண்டு வணங்கி, அனுமன் செல்லுதல்
 

8745.

இமய மால் வரையை உற்றான்; அங்கு உள
                              இமைப்பிலோரும்,
கமையுடை முனிவர், மற்றும் அறன் நெறி கலந்தோர்,
                                    எல்லாம்,
அமைக, நின் கருமம்!’ என்று வாழ்த்தினர்; அதனுக்கு
                                        அப்பால்,
உமையொருபாகன் வைகும் கயிலை கண்டு, உவகை
                                    உற்றான்.*

 

இமையமால்  வரையை உற்றான் - அனுமன்   இமயம்   என்னும்
பெரிய   மலையை   அடைந்தான்;   அங்குஉள   இமைப்பிலோரும்
கமையுடை   முனிவர்
  -   அங்கு  வாழும்  இமையாக்கண்ணராகிய
தேவர்களும்,  பொறுமையுடைய  முனிவர்களும்;   மற்றும் அறன்நெறி
கலந்தோர் எல்லாம்
 -  மேலும்  அறநெறி  வழுவாப்  பெரியோரும்,
ஆகிய  அனைவரும்; ‘அமைக, நின் கரும்ம!’ என்று வாழ்த்தினர் -
(அனுமனைப்   பார்த்து)   ‘நீ   மேற்கொண்டுள்ள    செயல்   இனிது
நிறைவேறுவதாக’   என்று   வாழ்த்தினார்கள்;  அதனுக்கு   அப்பால்
உமையொரு பாகன் வைகும் கயிலை  கண்டு  உவகை  உற்றான்
-
அதன் பின்னர் உமையம்மையை இடப்பாகங் கொண்ட சிவ