பக்கம் எண் :

668யுத்த காண்டம் 

‘இவன் எழுந்த தன்மை என்?’ என்று உலகு ஈன்றான் கேட்ப -
“இவன்  வான்வழி  எழுந்து   செல்வதற்கு  யாது  காரணம்?”   என்று
உலகத்தை  ஈன்ற  உமையவள்  கேட்க;  மன்னவன் இராமன் தூதன்
மருந்தின்மேல்  வந்தான்
  -    “மன்னவர்   குலத்துத்  தோன்றிய
இராமனின்    தூதனாகிய   இவன்    மருந்தைக்   கொண்டு   போக
வந்திருக்கின்றான்’; ‘வஞ்சர்  தென் நகர் இலங்கைத் தீமை  தீர்வது
திண்ணம்!’
 -  “வஞ்சகராகிய அரக்கர்க் குரிய தென்  இலங்கையினால்
உளதாகிய  தீமை இனித்தீர்வது திண்ணம்’; நன்னுதல்!   நாளை நாமும்
சேர்ந்து   வெம்போர்காணுதும்   என்றான்
 -  “அழகிய   நுதலை
உடையவளே!   நாளை  நாமும்  (தேவர்களுடன்)  சேர்ந்து    கொடிய
போரைக் காண்போம்” என்று கூறினான் பரமன்.
 

                                               (45)
 

            ஏமகூடத்தைத் தாண்டி, அனுமன் மேருமலைமீது போதல்
 

8748.

நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி,
ஏமகூடத்தின் உம்பர் எய்தினன், இறுதி இல்லாக்
காமமே நுகரும் செல்வக் கடவுளர் ஈட்டம் கண்டான்;-
நேமியின் விசையின் செல்வான்-நிடதத்தின் நெற்றி உற்றான்.
 

நேமியின்  விசையின் செல்வான் - சக்கரப்படைபோல விரைவாகச்
செல்லுகின்ற அனுமன்; நாம ஆயிரம் யோசனைகள் கொண்டது நடுவு
நீங்கி
 -  பெயர்பெற்ற  (ஒன்பதின்)   ஆயிரம் யோசனைத் தொலைவு
கொண்ட நடுவிடத்தைத் தாண்டி; ஏம கூடத்தின் உம்பர் எய்தினன் -
ஏம  கூட மலையின் மேல் அடைந்து நின்று; இறுதி இல்லாக் காமமே
நுகரும்   செல்வக்   கடவுளர்  ஈட்டம்  கண்டான்
-  முடிவில்லாத
காமஇன்பத்தையே    துய்க்கின்ற   செல்வச்   சிறப்பினை     உடைய
தேவர்களின் கூட்டத்தைக்  கண்டான்; நிடதத்தின் நெற்றி உற்றான் -
பின்பு நிடத மலையின் உச்சியை அடைந்தான்.
 

                                                (46)
 

8749.

எண்ணுக்கும், அளவு இலாத அறிவினோர் இருந்து நோக்கும்
கண்ணுக்கும், கருதும் தெய்வ மனத்திற்கும், கடியன்
                                         ஆனான்,