| மண்ணுக்கும், திசைகள் வைத்த வரம்பிற்கும், மலரோன் வைகும் விண்ணுக்கும், அளவை ஆன மேருவின்மீது சென்றான். |
எண்ணுக்கும் அளவு இலாத அறிவினோர் - (மனிதர்) எண்ணத்திற்கும் அளவிட முடியாத அறிவினை உடைய ஞானிகள்; இருந்து நோக்கும் கண்ணுக்கும் - இருந்தவாறே எல்லாவற்றையும் நோக்குகின்ற ஞானக்கண்ணுக்கும்; கருதும் தெய்வ மனத்திற்கும் கடியன் ஆனான் - எல்லாவற்றையும் கருதவல்ல தெய்வ மனத்திற்கும் பின்பற்ற முடியாத வேகத்தை உடையவனான அனுமன்; மண்ணுக்கும் திசைகள் வைத்த வரம்பிற்கும் - மண்ணுலகத்திற்கும், திசைகளுக்குரியவாகவைத்த எல்லைக்கும்; மலரோன் வைகும் விண்ணுக்கும் - பிரமன் தங்கியுள்ள பிரமலோகமாகிய விண்ணுலகத்திற்கும்; அளவை ஆன மேருவின் மீது சென்றான் - அளவு கருவி போல் உளதான மேரு மலையின் மீது போனான். |
(47) |
பிரமன் முதலிய தேவர்களை வணங்கிச் செல்லுதல் |
| 8750. | ‘யாவதும் நிலைமைத் தன்மை இன்னது’ என்று, இமையா நாட்டத் தேவரும் தெரிந்திலாத வடமலைக்கு உம்பர்ச் சென்றான்; நாவலம் பெருந் தீவு என்னா நளிர் கடல் வளாக வைப்பில், காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தைக் கண்டான்.* |
இமையா நாட்டத் தேவரும் - இமையாத விழிகளைப் பெற்ற தேவர்களும்; ‘நிலைமைத் தன்மை இன்னது’ என்று யாவதும் தெரிந்திலாத - நிலையாக உள்ள தன்மையாவது எனச் சிறிதும் தெரியவியலாத; ‘வடமலைக்கு உம்பர் சென்றான்’ - மேருமலைக்கு மேலே சென்று; நளிர்கடல் வளாக வைப்பில் - குளிர்ந்த கடலால் சூழப்பட்ட பூமியில்; நாவலம் பெருந்தீவு என்னா - நாவலம் பெருந்தீவு என்று; காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தைக் கண்டான் - காவலை உடைய மூன்று உலகத்தாரும் |