சிறப்பித்துக் கூறுவதற்குக் காரணமான தெய்வத்தன்மையை உடைய பெரிய நாவல் மரத்தைக் கண்டான். |
(48) |
| 8751. | அன்ன மா மலையின் உம்பர், உலகு எலாம் அமைத்த அண்ணல் நல் நெடு நகரம் நோக்கி, அதன் நடு நாப்பண் நாம பொன் மலர்ப் பீடம்தன்மேல் நான்முகன் பொலியத் தோன்றும் தன்மையும் கண்டு, கையால் வணங்கினான்-தருமம் போல்வான்.* |
தருமம் போல்வான் - தருமதேவதை போன்றவனான அனுமன்; அன்னமாமலையின் உம்பர் - அந்த மேருமலையின் உச்சியில்; உலகு எலாம் அமைத்த அண்ணல் நல்நெடு நகரம் நோக்கி - உலகங்கள் அனைத்தையும் படைத்த பிரம தேவனுடைய சிறந்த நகரைப்பார்த்து; அதன் நடு நாப்பண் நாம பொன்மலர்ப் பீடம்தன்மேல் - அதன் நட்ட நடுவில் புகழ்பெற்ற பொன்மலர்ப்பீடத்தின் மேல்; நான்முகன் பொலியத் தோன்றும் - நான்முகக்கடவுள் பொலிவு பெற்றுத் தோன்றும் தன்மையைக்; கண்டு கையால் வணங்கினான் - கண்டு தன்கைகளால் வணங்கினான். |
(49) |
| 8752. | தரு வனம் ஒன்றில், வானோர் தலைத்தலை மயங்கித் தாழ, பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க, மரு விரி துளவ மோலி, மா நிலக் கிழத்தியோடும் திருவொடும் இருந்த, மூலத் தேவையும் வணக்கம் செய்தான். |
தருவனம் ஒன்றில் வானோர் தலைத்தலை மயங்கித்தாழ- (பின்னர் அனுமன்) மரங்கள் நிறைந்துள்ள வனமொன்றில் தேவர்கள் இடந்தொறும் இடந்தொறும் கலந்து வணங்கி நிற்க; பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க-ஒப்பற்ற முனிவர்கள் வேத மந்திரங்களோடு புகழ்ந்து சொல்லும் ஒலி மிக்குத் தோன்ற; மருவிரிதுளவ மோலி மாநிலக்கிழ்த்தியோடும் - |