| அந்தர வான நாடர் அடி தொழ, முரசம் ஆர்ப்ப, இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து, இறைஞ்சிப் போனான்.* |
சந்திரன் அனைய கொற்றத் தனிக்குடை தலையிற்று ஆக - சந்திரனைப் போன்ற வெற்றிமைந்த ஒப்பற்ற குடை தலைமீது நிழற்றவும்; சுந்தர மகளிர் அங்கைச் சாமரை தென்றல் தூற்ற - அழகிய பெண்கள் தம் அழகிய கையில் தாங்கிய வெண்சாமரைகள் தென்றல் (போலும்) இளங்காற்றை வீசவும்; அந்தரவானநாடர் அடி தொழமுரசம் ஆர்ப்ப - ‘அந்தரம்’ எனப்படும் வான் நாட்டில் உள்ள தேவர்கள் அடிவணங்கி நிற்க, முரசங்கள் ஆரவாரிக்க; இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து இறைஞ்சிப் போனான் - இந்திரன் அரியணையில் இருந்த தன்மையைக் கண்டு மகிழ்ந்து வணங்கிப் போனான். |
(52) |
| 8755. | பூ அவர் மரத்தைப் போர்ப்ப அந்தரம் விரிந்து பொங்கும் தேவர்தம் இருக்கையான் மேருவின் சிகர வைப்பில், மூவகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும் காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரியக் கண்டான்.* |
பூ அலர் மரத்தைப் போர்ப்ப அந்தரம் விரிந்து பொங்கும் - மலர்கள் விரிந்து கற்பகத் தருவைச் சூழுமாறு போல விண்ணில் விரிந்து உயர்ந்திருக்கின்ற; தேவர்தம் இருக்கை ஆன மேருவின் சிகர வைப்பில் - தேவர்களின் இருப்பிடமான மேருமலையின் சிகரங்களாகிய இடங்களில்; மூவகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும் - மூவகையான உலகத்தைச் சூழ்ந்திருக்கின்ற முரண்பட்ட திசைகள் எட்டையும் முறைமையாகக் காத்து நிற்கின்ற; காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரியக் கண்டான் - திசைக் காவலர் எண்மரும் நிற்கின்ற தன்மையையும் தெளிவாகக் கண்டான். (அனுமன்). |
(53) |
| 8756. | அத் தடங் கிரியை நீங்கி, அத் தலை அடைந்த வள்ளல், உத்தரகுருவை உற்றான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி, |