| செத்திய இருள் இன்றாக, விளங்கிய செயலை நோக்கி, வித்தகன், ‘விடிந்தது!’ என்னா, ‘முடிந்தது, என் வேகம்!’ என்றான். | அத்தடங்கிரியை நீங்கி அத்தலை அடைந்த வள்ளல் - அந்தப் பெரிய மேருமலையை விட்டு நீங்கி அப்பக்கத்தை அடைந்த அனுமன்; உத்தரகுருவை உற்றான் - உத்தர குரு என்ற போக பூமியை அடைந்தான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி - அங்கு, ஒளியை உடைய சூரியன் தன் கதிர்களைப் பரப்பி; செத்திய இருள் இன்றாக விளங்கிய செயலை நோக்கி - நெருங்கிய இருள் இல்லையாம்படி செய்து கொண்டு விளங்கிய செயலைப் பார்த்து; வித்தகன், “விடிந்தது!” என்னா, முடிந்தது, என்வேகம்!’ என்றான் - திறமைமிக்கவனாகிய அனுமன், பொழுது விடிந்து விட்டது என்று கருதி, ‘என் வேகம் முடிந்துவிட்டது’ என வருந்திக் கூறினான். | (54) | | 8757. | ‘ஆதியான் உணராமுன்னம் அரு மருந்து உதவி, அல்லின் பாதியால், அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்குச் சோதியான் உதயம் செய்தான்; உற்றது ஓர் துணிதல் ஆற்றேன்; ஏது யான் செய்வது? என்னா, இடர் உற்றான், இணை இலாதான். | இணை இலாதான் - ஒப்பற்றவனாகிய அனுமன்; ஆதியான் உணரா முன்னம் அருமருந்து உதவி - ஆதிமூர்த்தியாகிய இராமன் மூர்ச்சை தெளிதற்கு முன்பே அரிய மருந்தினைக் கொண்டு போய்க் கொடுத்து; அல்லின்பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்குச் - இரவின் பாதியிலேயே அத்துன்பத்தை நீக்க எண்ணி இருந்த எனக்கு; சோதியான் உதயம் செய்தான் - பேரொளியை உடைய கதிரவன் உதயஞ் செய்து விட்டான்; உற்றது ஓர் துணிதல் ஆற்றேன்- இனிப் பொருந்திய செய்ல இன்ன தென்பதைத் துணிய இயலாதவனாக இருக்கின்றேன்; ‘ஏது யான் செய்வது?’ என்னா இடர் உற்றான் - |
|
|
|