பக்கம் எண் :

674யுத்த காண்டம் 

(இப்போது)  ‘யான்       செய்ய    வேண்டுவது    எது?’    என்று
வருத்தமடைந்தான்.
 

                                                (55)
 

8758.

கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான்,-’கதிரின்
                                    செல்வன்
மேல் திசை எழுவான்அல்லன்; விடிந்ததும் அன்று; மேரு
மாற்றினன், வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்
சாற்றினர்’ என்ன, துன்பம் தவிர்ந்தனன்-தவத்து மிக்கான்.

 

தவத்து மிக்கான் - தவத்தாற் சிறந்தவனும்;  கால் திசை சுருங்கச்
செல்லும்  கடுமையான்
 -  காற்றின் வேகம்  குறையுமாறும் திசையின்
தொலைவு சுருங்குமாறும்   செல்லுகின்ற விரைவினை உடையவனுமாகிய
அனுமன்; கதிரின் செல்வன்  மேல்  திசை  எழுவான்  அல்லன் -
கதிரினைச் செல்வமாக உடைய  சூரியன்  மேற்குத் திசையில் எழுகின்ற
இயல்புடையவன்  அல்லன்;  விடிந்ததும்  அன்று; மேருமாற்றினன் -
இப்போது    விடியற்காலமுமில்லை;   மேருவில்    தன்   செலவை
மாற்றினவனாய்; வடபால் தோன்றும் என்பது  மறைகள் வல்லோர்
சாற்றினர்
 - வடபுறத்தில் (உள்ளார்க்கு மேற்குத்திசையில்)   தோன்றும்
என்பது,   வேதம்  பயின்றவர்கள்  கூறியுள்ளனர்;  என்ன,   துன்பம்
தவிர்ந்தனன்
- என்று எண்ணித் துன்பம் தணிந்தான்.
 

                                                (56)
 

             உத்தரகுரு நாட்டைக்கண்டு, அனுமன் அப்பால் போதல்
 

8759.

இருவரே தோன்றி, என்றும் ஈறு இலா ஆயுள் எய்தி,
ஒருவரோடு ஒருவர், உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி,
பொரு அரும் இன்பம் துய்த்து, புண்ணியம் புரிந்தோர்
                                       வைகும்,
திரு உறை கமலம் அன்ன, நாட்டையும் தெரியக் கண்டான்.

 

இருவரே தோன்றி, என்றும் ஈறுஇலா ஆயுள்  எய்தி -  (ஆண்
பெண் என்ற) இருவரே பிறந்து, என்றும் முடிவிலாத ஆயுளைப்