பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 675

பெற்று;  ஒருவரோடு ஒருவர், உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி -
ஒருவரோடு ஒருவர்  உள்ளமும்  உயிரும் ஒன்றே என்னுமாறு ஒற்றுமை
உடையராய்; பொரு அரு  இன்பம்  துய்த்து புண்ணியம் புரிந்தோர்
வைகும்  
 -   ஒப்பற்ற   இன்பம்  துய்த்துக்   கொண்டு,  புண்ணியச்
செயல்களைச்  செய்தோர்  பொருந்தி  இருப்பதான; திருஉறை  கமலம்
அன்ன  நாட்டையும் தெரியக் கண்டான்
- திருமகள் வாழும் தாமரை
மலர்போன்ற உத்தர குரு நாட்டையும் கண்களால்  தெரியக்   கண்டான்.
 

புண்ணியப்     பயன்காரணமாக ஆண், பெண் என இரு பாலராகத்
தோன்றி,  ‘ஓருயிரும் ஈருடலும்’ என்னுமாறு  உள்ளமொத்து  வாழ்கின்ற
வாழ்வினராயும்,  முடிவிலா  ஆயுளும்,  ஒப்பற்ற  இன்பமும்    பெற்று
திருமகள்  தங்கியுள்ள தாமரை எனும் படித்தான உத்தரகுரு    நாட்டில்
வாழ்வர்.  அத்தகைய  உத்தர  குருவை  அனுமன்  தன்    கண்களால்
காணப் பெற்றான் என்பதாம். “திருவின் அருந்தவ முடித்தோர்,   உத்தர
குருவின்   ஒப்பத்   தோன்றிய”  (சிலப்-மனையறம்-9-10)    என்பதும்
இதற்கு,   “அறத்தானாகிய   பொருளால்   தலைப்படு     தானத்தைச்
செய்தோர்   எய்தும்   உத்தரகுருவினை”  என்ற  அதன்    உரையும்
காணத்தக்கது. இதனைக் ‘காம பூமி’ எனவும்,   ‘தானப் பயனாற் பெறும்
போகபூமி’ எனவும் கூறுவர் (சீவக - 189)
 

                                                (57)
 

8760.

வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன், மலரின் மேலான்,
கன்னி நாள் திருவைச் சேரும் கண்ணனும், ஆளும் காணி,
சென்னி நாள் தெரியல் வீரன், தியாக மா விநோதன்
                                        தெய்வப்
பொன்னி நாட்டு உவமை வைப்பை, புலன் கொள,
                                   நோக்கிப்போனான்.*
 

வன்னி நாட்டிய பொன்  மௌலி வானவன், மலரின் மேலான்-
வன்னி இலையைத் தரித்த   பொன்னிறமான சடா மகுடத்தைத் தாங்கிய
சிவபெருமானும்,   தாமரை    மலரில்  வீற்றிருக்கும்  பிரம  தேவனும்;
கன்னிநாள் திருவைச்   சேரும்   கண்ணனும்  -  என்றும்  மாறாக்
கன்னிமையுடைய  திருமகளை    மார்பிலே  கொண்டுள்ள  திருமாலும்;
ஆளும்   காணி   -  ஆட்சி  செய்கின்ற  தலமாகி; சென்னி  நாள்
தெரியல்வீரன் தியாக  மா  விநோதன்
 -  தலையில்  அன்றலர்ந்த
மலர்மாலையைப் புனைந்த வீரனும், தியாக மாவிநோதன் என்ற