பக்கம் எண் :

676யுத்த காண்டம் 

சிறப்புப்     பெயர்     தாங்கியவனும்   ஆகிய சோழனுடையதுமாகிய;
தெய்வப்    பொன்னி     நாட்டு      உவமை     வைப்பை -
தெய்வத்தன்மையுடைய  காவிரி பாயும் சோழ நாட்டுக்கு   உவமையாகத்
தக்க  அந்த  உத்தரகுருவை; புலன்  கொள  நோக்கிப் போனான் -
அனுமன் கட்புலன் கொள்ளுமாறு கருத்தொடு நோக்கிச் சென்றான்.
 

வன்னி     - ஓர்மரம். அதன் இலை சிவபெருமான்  சூடுதற்குரியது.
முன்பு  கோசலத்தை  “காவிரிநாடன்ன  கழனி  நாடு   ஓரீஇ” (குகப்-1)
எனக்  கூறிய  கம்பநாடன்  இங்கு  உத்தர  குருவைக்   காவிரி பாயும்
நாட்டிற்கு  உவமையாகத்  தக்கதென்று  கூறித்தனது    நாட்டுப்பற்றைக்
காட்டுகின்றான்.  ‘தியாகமாவிநோதன்’  என்பது    முதற்குலோத்துங்கன்
முதல்   பல  சோழ  மன்னர்க்குப்  பெயராக   வருதலின்   இதனைக்
கொண்டு கம்பனின் காலத்தை வரையறுத்தற்கியலாமற் போகின்றது.
 

                                                (58)
 

          நீலமலைக்கு அப்பால் மருத்துமலையை அனுமன் காணுதல்
 

8761.

விரிய வன் மேரு என்னும் வெற்பினின்மீது செல்லும்
பெரியவன், அயனார் செல்வம் பெற்றவன், பிறப்பும்
                                 போர்ந்தான்,
அரியவன், உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து
                                  தோன்றும்
கரியவன் என்ன நின்ற, நீல மால் வரையைக் கண்டான்.

 

வன்மேரு என்னும் வெற்பினின் மீதுவிரிய செல்லும் பெரியவன்
- வலிய  மேரு  என்னும் மலையின் மீது (வேகந்தாங்காது) பிளவுறுமாறு
செல்லும்  பெரிய   தோற்றத்தை  உடையவனும்; அயனார்   செல்வம்
பெற்றவன் பிறப்பும்  பேர்ந்தான்   அரியவன்
  -    பிரமனுடைய
பட்டத்தைப்    பெறப்   போகின்றவனும்,  பிறவித்   துன்பத்தினின்றும்
நீங்கியவனும்,  குரங்கு  வடிவினனுமாகிய  அனுமன்; உலகம்  எல்லாம்
அளந்தநாள்  வளர்ந்து தோன்றும்
- உலகம் அனைத்தையும் அளந்த
காலத்தில் பேருரு வினனாக வளர்ந்து தோன்றுகின்ற; கரியவன்  என்ன
நின்ற நீல மால் வரையைக் கண்டான்
- திருவிக்கிரமனாகிய கரியவன்
போல நின்ற பெரிய நீலமலையைக் கண்டான்.
 

                                                (59)