பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 677

8762.

அல் குன்ற அலங்கு சோதி அம் மலை அகலப் போனான்,
பொன்   குன்றம்   அனைய   தோளான்   நோக்கினான்,
                                  புலவன் சொன்ன
நல் குன்றம் அதனைக் கண்டான், உணர்ந்தனன்-’நாகம
                                           முற்ற
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம்’ என்ன.
 

அல்குன்ற அலங்கு சோதி அம்மலை அகலப்போனான்-இருளும்
(தன்   முன்னர்)   ஒடுங்குமாறு     (மிகக்  கருநிறத்துடன்)  விளங்கும்
சோதியையுடைய   அம்மலை    பின்னிடுமாறு  கடந்து சென்றவனாகிய;
பொன்குன்றம்  அனயை     தோளான்         நோக்கினான் -
பொன்மலைபோன்ற  தோளினை உடைய அனுமன் கண்களால்  நோக்கி;
புலவன் சொன்ன நல்குன்றம்  அதனைக் கண்டான் - அறிஞனாகிய
சாம்பவன்  சொன்ன  நல்லமருந்துமலையைக்  கண்டு;   தெய்வமருந்து
அடையாளம் நாகம் முற்ற எல்குன்ற எறியும் என்ன உணர்ந்தனன்
-தெய்வத்தன்மை   வாய்ந்த  மருந்துக்கு அறிகுறி, மேலுலகம் முழுவதும்
சூரியனுடைய    ஒளி    குறையுமாறு  ஒளிவிடுவது  என்ன  ஊகித்துத்
தெரிந்து கொண்டான்.
 

                                                (60)
 

              மருத்து மலையை அனுமன் பெயர்த்து எடுத்து மீளுதல்
 

8763.

பாய்ந்தனன்; பாய்தலோடும், அம் மலை பாதலத்துச்
சாய்ந்தது; காக்கும் தெய்வம் சலித்தன, கடுத்து வந்து,
காய்ந்தது, ‘நீதான் யாவன்? கருத்து என்கொல்?
                                கழறுக!’என்ன,
ஆய்ந்தவன் உற்ற தன்மை அவற்றினுக்கு அறியச்
                                 சொன்னான்.

 

பாய்ந்தனன்     பாய்தலோடும்  -  (மருத்துமலையைத்  தெரிந்த
அனுமன்)  அந்த  மலைமீது பாய்ந்தான், அங்ஙனம் பாய்ந்த   உடனே;
அம்மலை  பாதலத்துச்  சாய்ந்தது  - அம் மருத்துமலை பாதலத்தில்
சாய்ந்தது; காக்கும் தெய்வம்சலித்தன - (அம் மருந்துகட்குக்) காவலாக
இருந்த  தேவதைகளும்  மனம் தளர்ந்தன; கடுத்து வந்து காய்ந்தது -
(பிறகு தேறி) விரைந்துவந்து சினங