இராவணனை விடுவித்தான்; பரசுராமனால் வெல்லப் பட்டவன் கார்த்தவீரியன் என்பது வரலாறு. |
49. 'நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள்' |
என்பதில் அடங்கியுள்ள வரலாறு (6151) |
குசத்துவன் என்ற முனிவர் வேதம் ஓதுகையில் அந்த வேத ஒலியில் தோன்றியவள் வேதவதி என்பாள். திருமகளே அவ்வாறு தோன்றினாள் என்பது வரலாறு. வேதவதியைத் தன் மகளாக ஏற்று வளர்த்தார். அழகிய சிறந்த வேதவதியைத் திருமணம் செய்து கொள்ள தேவர்கள் பலரும் பெண் கேட்டு வந்தனர். என்றாலும் அவளோ திருமாலுக்கன்றி வேறு ஒருவர்க்கும் வாழ்க்கைப் படேன் என மறுத்து வந்தாள். ஆனால் சம்பு என்ற அரக்கன் ஆசை மயக்கத்தால் குசத்துவ முனிவனைக் கொன்றானாக. அதனைப் பொறாது அவன் மனைவியும் தீயில் புகுந்து உயிர்நீத்தாள். பெற்றோரை ஒருங்கே இழந்த வேதவதி தன் எண்ணம் ஈடேறக் காடேகிக் கடுந்தவம் புரிந்து நின்றாள். அப்போது கைலையைப் பெயர்க்க இயலாது கடுந் துன்பம் உற்று இறையவரின் அருளால் விடுவிக்கப் பெற்று மகிழ்வொடு வந்து கொண்டிருந்த இராவணனின் கண்ணில் வேதவதி பட்டாள். அவள அழகால் கவரப்பெற்ற இராவணன் தன்னை மணக்குமாறு வேண்டினான். மறுக்கவே வலியப் பிடித்து இழுத்தான். அதனைப் பொறாது வெகுண்ட வேதவதி ''என்னை வலியப் பிடித்து இழுத்த உன்னையும் உன் கிளைகளையும் உன் நாட்டையும் ஒருங்கே அழிக்க மீண்டும் தோன்றி வருவேன்'' எனக் கூறித் தீயில் புகுந்தாள். அவளே சீதையாகப் பிறந்துள்ளாள் என்பது வரலாறு. |
50. சம்பரப் பெயருடைத் தானவர் இறைவனை |
அமரிடை தலைதுமித்த வரலாறு (6152) |
தாண்டக வனத்தில் வைஜயந்தம் என்ற நகரில் இருந்து அரசு புரிந்தவன் துமித்துவசன் என்ற மறுபெயர் உள்ள சம்பரன் என்ற அசுரன். இவன் மாயையில் வல்லவன். இவன் அசுரர்கள் பலர்தம துணையொடு சென்று தேவர்களை வென்று தேவேந்திரனை அடிமைப்படுத்தி, பொன்னுலகைப் பற்றினான். அரசிழந்த இந்திரன் தப்பி ஓடி நிலவுலக மன்னனான தசரத சக்கர வர்த்தியின் துணை வேண்டினான். தசரதன் அவனுக்கு |