பக்கம் எண் :

778யுத்த காண்டம் 

அபயம் நல்கி, தன்மனையாள் கைகேயியையும் உடன் அழைத்துக்
கொண்டு மீண்டும் நடந்த தேவாசுரப் போரில் தேவர்கள் பக்கம்
சேர்ந்து அசுரர்களை   எதிர்த்தான். தசரதன் வலிமைக்கு முன்பு
நிற்கவியலா அசுரன்  மறைந்து ஓடினான்.   ஆனால், தசரதனோ
அவன் சென்ற திசைகளிலெல்லாம் தொடர்ந்து சென்று அவனை
மட்டுமின்றி   அவனது  சுற்றத்தாரையும்  கொன்று ஆட்சியைக்
கைப்பற்றி இந்திரனிடம் கொடுத்தான்.
 

51. அமரர்கோன் விடையதா வெரிநின் மேலாய் 

என்பதில் அடங்கியுள்ள வரலாறு (6153)
 

தேவாசுரப்   போர்களில் ஒன்றில் அசுரர்கள் வென்றனர்;
தேவர்கள் தோற்றனர். தோற்ற தேவர்கள் காக்கும் கடவுளாம்
திருமாலின்   திருவடிகளில் வீழ்ந்து   இறைஞ்சித் தங்களைக்
காக்குமாறு வேண்டினர். அப்பெருமான் நிலவுலகில் புரஞ்சயன்
என்ற   மானிடனாய்த்   தோன்றி   அவுணர்களை   வென்று
தேவர்களைக்   காப்பதாகச் சொல்லி அருளியபடி, இட்சுவாகு
என்பானது  மகன் சசாதனன்  என்பவனுக்குப்  பிள்ளையாய்ப்
பிறந்த  புரஞ்சயன்  என்ற  பெயரினராய்  வளர்ந்தார். அறிந்த
தேவர்கள் புரஞ்சயனிடம்  தங்கட்கு  உதவுமாறு  வேண்டினர்
வேண்டுதலைக்  கேட்ட  புரஞ்சயன்  தேவேந்திரன்  தனக்கு
வாகனமாக அமையின் அவன் மீது அமர்ந்து  போர்  செய்து
வெற்றி வாகை சூடி  வருவேன்  என்றான். இ ந்திரன் வெற்றி
ஒன்றையே  குறிக்கோளாகக்  கொண்டு எருதின் வடிவெடுத்து
நின்றான். புரஞ்சயன்  எருதின்  முதுகின் மேல் ஏறி அமர்ந்து
அசுரர்களைப்  போரில்  வென்றான். முதுகுக்கு வடமொழியில்
'ககுத்' எனப் பெயர். இந்திரனை வாகனமாகக் கொண்டதனால்
இந்திரவாகனன்  என்றும்  கருத்தத்தின்  மீது அமர்ந்து போர்
புரிந்தமையால்  காகுத்தன்  என்றும்  திருமாலுக்குப் பெயர்கள்
அமைந்தன என்பது வரலாறு.
 

52. அவனியை, ''பெருவளம் தருக'' என்று 

வேண்டியதில் அடங்கியுள்ள வரலாறு (6153)
 

வேனன் என்பவன் ஓர் அரசன். அவன் செருக்கு மிக்கவன்.
செருக்கின்   காரணமாக,  திருமாலுக்குச்   செய்ய   வேண்டிய
யாகங்கள் அர்ப்பணிப்புகள் ஆகியனவற்றைத்  தான் செய்யாதது