53. அயில்போல் வற்றக் கடல் சுடுகிற்பன என்பதில் |
அடங்கியுள்ள வரலாறு (7878) |
உக்கிர பாண்டியன் என்பான் மக்கள் நலம் நாடி முறை தவறாது ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவன். மக்கள் நலம் நாடி பல அஸ்வமேத யாகங்கள் செய்து வந்தான். அவனின் ஆட்சிச் சிறப்பையும் வெற்றிச் சிறப்பையும் கண்டு பொறுக்க முடியாத இந்திரன், தன் ஏவலில் இயங்கும் வருணனை அழைத்து அந்நாடு வளம் குன்றுமாறு மழையைப் பெய்விக்க ஆணை பிறப்பித்தான். வருணன் தன் வாழ்இடமான கடலைப் பொங்கி எழுச் செய்து நாட்டை அழிக்க முனைந்தான்., கருணையம் கடவுளாம் சிவனார் பாண்டியன் கனவில் தோன்றி நிகழ்வன கூறி வேல் எறிந்து கடலை வற்றச் செய்யுமாறு வழி கூறிப் போனார். பாண்டியன் தன் கூரிய வேலைச் செலுத்தி வருணனின் எழுச்சிக்கு ஆதியாக உள்ள கடலை வற்றச் செய்து நாட்டைக் காத்தான் என்பது வரலாறு. |
54. அம்பரீடர்க்கு அருளியதில் அடங்கியுள்ள |
வரலாறு (8668) |
அம்பரீடன் என்பவன் சூரிய குலத்து மன்னர்களில் ஒருவன். இவன் சிறந்த வைணவ பக்தன். ஏகாதசி விரதத்தைத் தவறாது செய்பவன். ஒரு முறை அவ்வாறு விரதம் இருந்து துவாதசி அன்று காலை விருந்து செய்வித்தனன். அன்று துருவாச முனிவரும் வரவே அவரையும் வரவேற்று விருந்துண்ண வருமாறு வேண்ட அவரும் இசைந்து காலைக் கடன்களை முடித்து நாட்பூசனை செய்து வருவதாகக் கூறி யமுனைக்குச் சென்றார். துருவாசர் வருவதற்குத் தாமதம் ஆகவே அரசன் பாரணை செய்வதற்கு முன்பு பகவானுக்குப் பூசனை செய்த புனித நீரை உண்டு இருந்தனன். யமுனை சென்று கடன்களை முடித்துத் திரும்பிய துருவாசர் அரசன் புனித நீரை விருந்தினனாகிய தன்னை விட்டுவிட்டு உண்டதற்கு வெகுண்டு, தன் தலை மயிரில் ஒன்றைப் பறித்து மண்ணில் ஏறிய அதனின்று பூதம் ஒன்று தோன்றி அரசனை எதிர்த்தது. மன்னனோ திருமாலை நினைத்துத் தவம் செய்தான். பரமன் தன் சக்கராயுதத்தை அனுப்பிப் பூதத்தைக் கொன்றார். அதனோடு அமையாது அதனை உருவாக்கிய முனிவனைத் துரத்த, முனிவன் அஞ்சிப் |