பக்கம் எண் :

 கதைக் குறிப்புகள்781

பலரிடம் அடைக்கலம் புகுந்தும் பயனற்றுப் போக,  அம்பரீட
னிடமே   வேண்டி நின்றார்.   அம்பரீடன்  சக்கராயுதத்தைத்
தொழுது வேண்டி முனிவனைத் துன்பத்தினின்றும் காத்தான்.
 

55. அயனார் மகனுக்கு அளித்ததில் அடங்கியுள்ள 

வரலாறு (8668)
 

அயனார்தம்  மகன்  சிவன்  என்ற  கருத்தும் உண்டு. அந்தக்
கருத்தின்   அடிப்படையில்,  'யார்தலையில்    கை   வைத்தாலும்
அவர் பஸ்மமாகப்  போக'  சிவனிடம்   வரம் பெற்ற  பத்மாசூரன்
சிவனார்  தலையிலேயே  கை  வைக்க முனைந்தான். சிவன் அஞ்சி
ஓடினார். அவ்வேளையில் திருமால் அழகிய பெண் உருக் கொண்டு
சூரன்   முன் தோன்றவே,   அவள் மீது  மையல் கொண்ட சூரன்
சிவனை   மறந்து பெண்ணைத்   தொடர்ந்தான்; அப் பெண்ணைத்
தழுவ   நெருங்கினான். பெண்   உருவில் வந்த திருமால் அவனை
நீராடி வருமாறும்  வந்தால்  சேர்ந்து மகிழலாம்  என்றும் கூறினார்.
செய்வதனை   எண்ணாமல்  நீராடத் தன் தலையில் தானே கையை
வைத்தான். சிவனாரின் வரத்தின் படி அவனே எரிந்து சாம்பலானான்.
அயனால் மகனாம்   சிவனார் அச்சம்   நீங்கி   வெளியே  வந்தார்.
இவ்வாறு சிவனைத் திருமால் காத்தார் என்பது வரலாறு.
 

56. தெள்ளரும் கால கேயர் என்பதில் அடங்கியுள்ள 

வரலாறு (9242)
 

காலகேயர்  என்பார்  காசியப  முனிவர்க்கும்  கலையென்பாட்கும்
பிறந்தவர்கள்  புலோமர்  என்ற  முனிவர்க்கும்  துதி   என்பாளுக்கும்
பிறந்தவர்கள்  என  இரண்டுவித  கருத்துக்கள் உண்டு. இவர்கள் மிக்க
வலிமை  உடையவர்கள்.  ஏனைய  அசுரர்கள்   போல  கருநிறத்தவர்
அல்லர்;   பொன்னிறத்தவர்.    தேவர்களைப்    பலமுறை    வெற்றி
கொண்டவர்கள். அவ்வளவு வலிமை மிக்கவர்கள். அவர்கள் ஒருமுறை
கடலில் ஒளிந்திருந்த போது இராவணன் எட்டுத் திசைகளையும் காத்து
நின்ற திசைக் காவலர்களை வெல்லச் சென்றான். அப்போது இவர்களை
வென்று அடக்கினான் என்பது வரலாறு.