கதிரவன் நொடிக்கு நொடி தன் ஒளியாற்றலில் குறைந்து வருகின்றான் என்ற கருத்தை நம்பாது மக்கள் உணரும் வகையில் புனையப்பட்ட ஒரு புராண வரலாறு. இதில் அடங்கி உள்ளது; துவட்டா என்பவன் மகள் சஞ்சை. சஞ்சை கதிரவன் மனைவி யாக்கப்பட்டாள். ஆனால் கதிரவன் வெப்பம் தாங்க மாட்டாத சஞ்சை தன் உடல் நிழலை அவற்குத் தேவியாக அமைத்திட்டுத் தந்தை இல்லம் ஏகினாள். பலகாலம் சென்றபின் உண்மை உணர்ந்த கதிரவன் துவட்டாவின் விருப்பத்துக்கு இசைந்து தன்னைத் தன் ஒளி குறையுமாறு சாணை பிடிக்க ஒருப்பட்டான் என்பது புராணக் கதை. |