கம்பராமாயணக் கதைப் பாத்திரங்கள் |
அக்ககுமரன் | : | இராவணன், மண்டோதரியின் மகன், இந்திரசித்தின் தம்பி. |
அக்கினி தேவன் | : | சீதை தீயில் புக, அவளைச் சுடாது இராமனிடம் சேர்ப்பித்தவன். |
அகத்திய முனிவர் | : | 'குறுமுனி' தமிழ் முனி எனவும் குறிப்பர். கானகத்தில் இராமனுக்குப் படைக்கலம் அளித்தவர். |
அசும்பன் | : | (1) கரன் படை வீரருள் ஒருவன். தீ நிமித்தம் கண்டு கரனை எச்சரித்தவன். (2) இராவணன் துணைவருள் ஒருவன். நரசிங்கம் அனையான். |
அகலிகை | : | கௌதம முனிவரின் பத்தினி. கல்லாய்க் கிடந்தவள். இராமன் கால் பட்டுச் சாபம் தீர்ந்தவள். |
அங்கதன் | : | இந்திரன் அமிசமாக வாலிக்குத் தாரையிடம் பிறந்தவன். இராவணனிடம் தூது சென்றவன். |
அங்காரதாரை | : | கடல் மேல் செல்வார் நிழல் கண்டு, அவர்களைப் பிடித்து உண்ணக் கூடியவள். ''சாயாக்கிரகிணி' என்பது அவளது மற்றொரு பெயர். அநுமன் கடல் தாவுகையில் குறுக்கிட்டுத், தோற்ற அரக்கி. |
அசங்கன் | : | வானரப் படைத்தலைவன். |
அசமஞ்சன் | : | சகரனின் புதல்வன். தாய் விதர்ப்ப தேசத்து அரசன் மகள், விதர்ப்பை எனும் கேசினி. பகீரதனின் பாட்டனார். |
அசன் | : | அயன். தசரதனின் தந்தை. சுயம்வரத்தில் இந்துமதியை மணந்தவன். |
அஞ்சனை | : | அனுமனின் தாய். |
அஞ்சுமான் | : | அசமஞ்சன் புதல்வன். சகரனின் பேரன். |