அத்திரிமுனிவர் | : | பிரம்ம குமாரர்களுள் ஒருவர். காட்டில் இராம இலக்குவரை உபசரித்தவர். |
அதிகாயன் | : | இராவணனுக்குத் தானியமாலையிடம் பிறந்தவன். 'பெரிய உடம்பை உடையவன்' எனப் பொருள். |
அதிதி | : | காசிபன் மனைவி. புத்திரர் 33 கோடி சுரர். |
அம்பரீடன் | : | சூரிய குல வேந்தன். நரமேதத்திற்கு ஆள் தேடி இரிசிக முனிவரின் நடுமகன் சுனச்சேபன் என்பவனைப் பெற்று யாகத்தை முடித்தவன். |
அயோமுகி | : | இரும்பினால் ஆகியது போன்ற முகமுடைய அரக்கி. இலக்குவன் மீது காதல் கொண்டு அழிந்தவள். |
அரம்பை | : | 1. அருணன் மனைவி. 2. தேவநங்கை இராவணன் ஆட்சியில் குற்றேவல் செய்தவள். |
அரன் | : | வீடணன் அமைச்சர் நால்வருள் ஒருவன். |
அருணன் | : | காசியமுனிவருக்கு விநதையிடம் பிறந்தவன். மகன் - சடாயு; தம்பி - கருடன். சூரியனின் சாரதி. |
அருந்ததி | : | வசிட்டரின் மனைவி. கற்பில் சிறந்தவள். |
அனசூயை | : | அழுக்காறு இல்லாதவள். அத்திரி முனிவரின் பத்தினி. |
அனந்தன் | : | வானர வீரன். |
அனலன் | : | வீடணன் அமைச்சர் நால்வருள் ஒருவன். |
அனிலன் | : | வீடணன் அமைச்சர் நால்வருள் ஒருவன். |
அனுமன் | : | வாயுவின் மைந்தன். தாய் அஞ்சனை. இளம் பருவத்தில் சூரியனைப் பழம் எனக் கருதிப் பறிக்க முற்படுகையில் இந்திரன் வச்சிராயுதத்தால் அடிக்கப்பட்டுச் சிதைந்த கன்னம் உடையவன். (அனு - கன்னம்) இவன் தந்தை கேசரி. |
ஆதூர்த்தன் | : | குசன் மக்கள் நால்வருள் ஒருவன். தருமாரணியம் என்னும் ஊரைத் தலைநகரமாகக் கொண்டு வாழ்ந்தவன். |
ஆனிறக் கண்ணன் | : | கவாக்ஷன் பசுவின் கண்ணைப் போன்ற கண்களை உடையவன். வானரப் படைத் தலைவன். |
இட்சுவாகு | : | சூரிய குல மைந்தன். |