பக்கம் எண் :

 கம்பராமாயணக் கதைப் பாத்திரங்கள்785

இடபன்

:

வானரப் படைத் தலைவன். காளை
போன்றவன். குடதிசையில் சீதையைத்
தேடச் சென்றவன்.

இடும்பன்:

வானர வீரன்.

இந்திரசித்:

இராவணன் மைந்தன். இந்திரனை
வென்றதால் 'இந்திரசித்' எனப் பெயர்
பெற்றவன்.

இந்திரத்யும்நன்:

திருமால் பக்தன். அகத்தியர் சாபத்தால்
யானையாகப் பிறந்து முதலை
வாய்ப்பட்டுத் திருமாலால் வீடு பேறு
அடைந்தவன்.

இந்திரன்:

சரபங்க முனிவரை இந்திரலோகம்
அழைத்துச் செல்ல வருகையில், காட்டில்
இராமனைக் கண்டு போற்றியவன்.

இரகுமன்னன்:

சூரியகுல வேந்தன்.

இரணியன்:

பிரமனது மகனாகிய மரீசி பிரஜாபதியின்
மகனான காசிப முனிவர்க்குத் திதி
என்பவளிடம் பிறந்தவன். இரண்யாட்சனின்
தம்பி, பிரலாகதனின்தந்தை. இரணியன்
என்பதற்குப் 'பொன்னிறமானவன்' என்பது
பொருள்.

இரணியாட்சன்:

'பொற்கணான்' என்னும் பெயரினன்.
பூமியைப் பாயாக்கிக் கடலில் மறைக்க,
வராக அவதாரமெடுத்துத் திருமால்
மீட்டதாகப் புராண வரலாறு.

இராமன்:

காப்பியத் தலைவன்.

இராவணன்:

இலங்கை வேந்தன்.

இரிசிகன்:

பிருகுவின் மகன். கௌசியை மணந்தவன்.

இருசியசிருங்க முனிவர்:

விபாண்டக புதல்வர். மான்கொம்பைத்
தலையில் கொண்டவர். கலைக்கோட்டு
முனிவர் எனப்படுவார். மக்கள் பேறு
வாய்க்கும் யாகம் செய்தவர்.

இரேணுகாதேவி :

சமதக்னி முனிவரின் மனைவி.

இலக்குவன்:

இராமன் தம்பி. சுமத்திரையின் மகன்.

இலங்காதேவி:

இலங்கையின் காவல் தெய்வம். அனுமன்
அவளை வென்றதால் நகர் நீங்கிச்
சென்றாள்.

உத்தானபாதன்:

மனுகுலத்து வேந்தன். உரோமபாதன்
தந்தை.

உதாசித்து :

பரதனின் மாமன்.