உருமை | : | சுக்கிரீவன் மனைவி. |
உரோமபாதன் | : | உத்தானபாதனின் மகன். கலைக்கோட்டு முனிவரின் மாமன். |
உல்காமுகன் | : | வானரப் படைத்தலைவன். |
ஊர்மிளை | : | சனகன் தம்பி குசத்துவன் மகள். இலக்குவனின் மனைவி. |
ஊர்வசி | : | தேவநங்கை. இலங்கையில் இராவணன் ஆட்சியில் குற்றேவல் புரிந்து வந்தவள். |
ஏமை | : | ஹேமை. அசுரனாகிய மயனால் காதலிக்கப்பட்டவள் என்பது வான்மீகம். சுயம்பிரபையின் தோழி. |
ககுத்தன் | : | சூரியகுல மன்னன் |
கங்காதேவி | : | பகீரதனால் உலகில் நதியாகிப் பெருகியவள். |
கசகோமுகன் | : | மற்போரில் வல்ல வானரத் தலைவன். |
கந்தமாதனன் | : | வானரப் படைத்தலைவன். |
கபில முனிவர் | : | தன்னைப் பழி கூறியதால் சகரன் புத்திரர்களைச் சாம்பலாக்கியவர். |
கயன் | : | கஜன்; யானை போன்ற வடிவமுடைய வானரத் தலைவன். |
கரன் | : | இராவணன் தாய்மாமன் மகன். தண்டகாரண்யத்தில் சூர்ப்பணகைக்குத் துணையாக இருந்தவன். |
கருடன் | : | அருணனின் தம்பி. போர்க்களத்தில் நாகபாசம் நீக்கியவன். |
கவந்தன் | : | தலையற்று, வயிற்றில் வாய், கண் ஆகியவற்றை உடைய கொடிய வடிவினன். இராமனை எதிர்த்துச் சாபம் நீங்கப் பெற்றவன். |
கவயன் | : | வானர வீரன். |
கவயாக்கன் | : | கவயாக்ஷன், பசுவின் கண்போன்ற கண்களை உடையவன். 'கோலங்கூலம்' என்னும் கொண்டை முசுக்களுக்குத் தலைவன். |
காசிபன் | : | காசியப முனிவர். தக்கன் மகளிர் பதின்மூவரை மணந்து சுர, அசுரர் முதலியோரைப் படைத்தவர். இம்முனிவருக்கும் அதிதி தேவிக்கும் திருமால் |