பக்கம் எண் :

 கம்பராமாயணக் கதைப் பாத்திரங்கள்787

  

வாமனனாக அவதரித்தார்.
இம்முனிவர்க்கும் திதிக்கும் பிறந்தவர்கள் அசுரர்கள்.

காதி:

குசநாபனது மகன்.

கார்த்தவீரியார்ச்சுனன்:

ஆயிரந்தோள்களை உடையவன்.
பரசுராமன் அவற்றை வெட்டி வென்றனன்.

காலகேயர்:

ஒருவகை அசுரர்.

காலசங்கன்:

அரக்கன்.

காலநேமி:

இரண்யாட்சன் மகன். தந்தை இறந்தபின்
திருமாலோடு போரிட்டு மடிந்தவன்.

காலன்:

இலக்குவனால் கொல்லப்பட்ட ஓர் அசுரன்.

கியாதி:

பிருகுவின் மனைவி.

கிருதாசி:

குசநாபனது மனைவி.

கிலிஞ்சன்:

விராதன் தந்தை.

குகன்:

சிருங்கி பேரியர்கோன். வேடர
தலைவன். இராமனால் தம்பியாக
ஏற்றுக்கொள்ளப்பட்டவன்.

குசத்துவன்:

சனகன் தம்பி.

குசநாபன்:

குசன் மகன். மகோததி நகரைத்
தலைநகராகக் கொண்டு ஆண்டவன்.

குசன்:

1. பிரமதேவனின் மகன். மனைவி
வைதர்ப்பி.
2. குசனின் முதல் மகன். மூலநூலில்
'குசாம்பன்' எனக் காணப்படுகிறது. எனவே
'குசன்' என்பது 'குசாம்பன்' என்பதன்
விகாரம் என்பர். கவுசாம்பியைத் தலை
நகராகக் கொண்டு ஆண்டு வந்தவன்.

கும்பகர்ணன்:

குடம் போன்ற காதுகளை உடையவன்.
இராவணன் தம்பி.

கும்பன்:

கும்பகர்ணன் மகன்.

கும்பானு:

அரக்கர் தலைவன். இடும்பனால்
அழிந்தவன்.

குமுதன்:

வானர வீரன். ஆம்பல் நிறமுடையவன்.

குமுதாக்கன்:

வானர வீரன்.

குமுதி:

ஓர் அரக்கி.

குருதியின்கண்ணன்:

சோணிதாட்சன். அரக்கர் படைத்
தலைவன்.