பக்கம் எண் :

796யுத்த காண்டம் 

வருணன்:

இராமன் கடல் கடக்க உதவியவன்.

வன்னி:

வர்ணீ என்றதன் விகாரமாய் நித்திய
பிரமச்சாரியாகிய, மதங்க முனிவரைக்
குறிக்கும். வாலிக்குச் சாபமிட்டவர்.

வாதாபி (வி):

அசுரன்.

வாயுதேவன்:

'அதிகாயன் நான்முகப் படையால்
இறப்பான்' என இலக்குவனுக்கு
அறிவித்தவன்.

வாலி:

இந்திரன் மகன். கிட்கிந்தை வேந்தன்.
இராவணனை வாலில் கட்டியவன்.

விசயன்:

1. பரதனிடம் தூது சென்ற நால்வருள்
ஒருவன்.
2. வானரப்படைத் தலைவன்.

விசுவகர்மா:

கடவுள் தச்சன்.

விசுவாமித்திரர் :

காதியின் மகன். இராமஇலக்குவரை
யாகங்கள் காக்க அழைத்துச் சென்றவர்.

விதியுக்சிருவன்   :

சூர்ப்பணகையின் கணவன்.

விதர்ப்பை:

சகரன் மனைவி. விதர்ப்பநாட்டு அரசன்
மகள்.

விந்தன் :

வானரப்படைத் தலைவருள் ஒருவன்.

விநதை:

காசிபன் மனைவி.

விபாண்டகன்:

காசிபமுனிவரின் புதல்வன். கலைக்கோட்டு
முனிவரின் தந்தை.

விபீடணன்:

இராவணன் தம்பி.

விராதன் :

'தும்புரு' எனும் தேவன். குபேரன்
சாபத்தால் அரக்கனாகி இராமனால்
உயர்ந்தவன்.

விரூபாக்கன் :

விரூபாட்சன். பஞ்ச சேனாபதிகளுள்
ஒருவன். விலங்கு நாட்டத்தன் எனவும்
படுவன்.

வினதன் :

வானரப் படைத்தலைவன்

வேதவதி :

குசத்துவமாமுனியின் மகள். இராவணன்
வலிந்து பற்றியதால் சாபமிட்டுத் தீயில்
புகுந்தவள். அவளே சீதையாகப் பிறந்தாள்
என்பர்.

வேள்வியின்
பகைஞன் 
:

யக்ஞசத்துரு. அரக்கர் தலைவன்.

வைதர்ப்பி :

குசனின் மனைவி.

வைதேகி :

சீதை.