பக்கம் எண் :

 கதைக் குறிப்புகள்775

45. தேர்மேல் குதிகொண்டவள் என்பதில் 

அடங்கியுள்ள வரலாறு (4803)
 

அஞ்சனாதேவி என்பாள் கேசரி என்ற வானர வீரனின் மனைவி.
அரக்கர்களோ அனைவர்க்கும்   துன்பம் தருபவர்கள்.  அவர்களை
அடிக்க   வேண்டுமானால்   அவர்களைவிட   வலிமை  பெற்றவர்
வேண்டும். அத்தகைய     ஒரு பிள்ளையைப்    பெறுதல் வேண்டி
அஞ்சனாதேவி   வாயு தேவனிடம் சேர்ந்தாள். அப்படிப் பிறந்தவன்
தான்   அனுமன். அவனை   உருத்திரன் அம்சம்   என்று கூறுவர்.
அனுமன் பிறந்தவுடனே, தனது தாயை நோக்கி 'பசிக்கின்றது உணவு
கொடு   தாயே!' என்றான். அப்பா உனக்கும் பழமே உணவு என்று
கூறி பழம்   கொணர கானகம்   புகுந்தாள். அப்போது வைகறைப்
பொழுது.   கதிரவன் குணதிசை   எழுந்தான். கண்டான் அனுமன்.
அதுவும்   பழம் எனக் கருதி,  சூரியனின் மீது பாய்ந்து அவனின்
தேரில் குதித்தான்.   ஆயினும், அனுமனால் பின்னர் ஏற்படவுள்ள
இன்பச்   செயல்களை எண்ணிக்   கதிரவன் அவனைக் காயாமல்
விட்டான் என்பது வரலாறு.
 

46. 'ஓதத்தின் மேவுமது கைடவர்' என்பதில் 

அடங்கியுள்ள வரலாறு (4816)
 

உலகமெலாம் பிரளய   வெள்ளத்தில் மூழ்கிற்று. அப்போது
முன்னரே திருமாலிடம், எம்மைக் கொல்க எனத் தாங்கள் கூறிய
பின்னரே  தங்கட்கு இறுதி  வேண்டும் என்று வரம் பெற்றிருந்த
மதுவும்  கைடவனும் மட்டில்லா வெள்ளத்தில் நீந்தியும், நீரைக்
குழப்பியும்   ஆரவாரத்தோடு பிரமனிடம் சென்றனர்.  பிரமனை
எள்ளி நகையாடி   அவனிடமிருந்த    வேதங்களைப்  பறித்துச்
சென்று   வெள்ளத்தில் மறைத்து வைத்தனர். பிரமன்  செய்வது
அறியாது திருமாலிடம் சென்று நடந்ததைச் சொல்லி வேதங்களை
மீட்டுத்   தருமாறு வேண்டினன்.   திருமாலும்   கீத   ஒலியை
எழுப்பினார்.   ஒலியைக் கேட்டுக் கிறுகிறுத்த அசுரர் இருவரும்
வேதங்களை ஓரிடத்தே   வைத்து இனிய   ஒலி வந்த திசையை
நோக்கிச்    சென்றனர். அந்நேரத்தில்   திருமால் வேதங்களை
எடுத்துச்   சென்று   பிரமனிடம்  கொடுத்துவிட்டார். இவர்கள்
நெடுந்தொலைவு சென்றும் யாரையும் காணாமல் திரும்பி வந்தனர்.
தங்களிடம் இருந்த   வேதங்கள் எடுத்துச் செல்லப்பட்டதனைக்
கண்டனர்.   நடந்தது உணர்ந்து   திருமாலோடு   போர்புரியத்
தொடங்கினர். வெற்றி தோல்வி இன்றிப்