பக்கம் எண் :

 கம்பராமாயணக் கதைப் பாத்திரங்கள்789

சந்திரனை
வென்றான்

:

திலீபன் என்னும் சூரியகுல வேந்தன். சந்திரனை
வென்றதால் 'சந்திரஜித்' எனப் பெயர் பெற்றவன்.

சம்பரன்:

அசுரன். 'திமித்துவசன் எனும் மறுபெயர் உள்ளவன்.
தண்டகாரண்யத்தில் வைஜயந்த நகரத்தில் ஆண்டு,
தேவர்களை வருத்த, தசரதன் கைகேயியுடன்
சென்று அவனை வென்று இந்திரனைக் காத்தான்.

சம்பாதி:

1. சடாயுவின் தமையன். அருணனின் மகன். சூரிய
வெப்பத்தால் இழந்த சிறகுகளை, வானர வீரர்
கூறிய இராம நாமத்தால் திரும்பப் பெற்றவன்.
கழுகரசன். சீதை உள்ள இடத்தை உரைத்தவன்.
2. வீடணன் அமைச்சர் நால்வருள் ஒருவன்.

சம்புமாலி:

பிரகதத்தன் மகன். அனுமனால் அழிந்த அரக்கன்.

சயந்தன்:

இந்திரன் மகன். காக வடிவெடுத்துச் சீதையைத்
துன்புறுத்த, இராமன் தொடுத்த பிரம்மாத்திரம்
துரத்த, சரணம் வேண்டியதால் ஒரு கண்ணை
மட்டும் இழந்தவன்.

சரகுல்பன்:

வானரப் படைத்தலைவன்.

சரபன்:

எண்கால் புள் போன்ற வலிமையுடையவன்.
பர்ஜ்ந்ம தேவதையின் மகன்.

சராரி:

வானரப் படைத்தலைவன்.

சலபோசனன்:

தசரதனுக்குச் சாபம் கொடுத்தவர்.

சவரி:

'சபரர்' என்னும் வேடர் குலத்தினள். இராமன்
வருகை நோக்கிக் காத்திருந்து வீடு பேறு
பெற்றவள்.

சனகன்:

மிதிலை வேந்தன். சீதையின் தந்தை.

சாந்தை:

தசரதன் மகள். உரோமபாத மன்னனுக்கு வளர்ப்பு
மகளாகத் தரப்பட்டவள். இருசிய சிருங்கருக்கு
மணம் முடிக்கப்பட்டவள்.

சாம்பவன்:

ஜாம்பவான். பிரம்மா கொட்டாவி விட்டபோது
வாயினின்று கரடி வடிவில் தோன்றியவன்.
கரடிகளுக்கரசு.

சார்த்தூலன்:

இராவணனிடம் வானரசேனை குறித்துக் கூறிய
ஒற்றன்.