பக்கம் எண் :

790யுத்த காண்டம் 

சாரன்

:

இராவணனின் ஒற்றன்.

சிங்கன்

:

அசுரன் பனசனால் மடிந்தவன்.

சித்தார்த்தன்

:

பரதனிடம் தூது சென்ற நால்வருள் ஒருவன்.

சிபி

:

சூரியகுல வேந்தன். புறாவின் பொருட்டுத் துலை
புக்கவன் 

சீதை

:

காவியத் தலைவி.

சுக்கிரீவன்

:

அழகிய கழுத்துடையவன். சூரியன் மைந்தன். வாலியின் தம்பி.

சுக்கிரபகவான்

:

மகாபலியின் அமைச்சரும் குருவும் ஆவார்.
மன்னன் வாமனனுக்கு மூன்றடி மண் தருகையில்
தடுத்தவர். அதனால் ஒரு கண் இழந்தவர்.

சுகன்

:

இராவணனின் ஒற்றன்.

சுகேசன்

:

சுமாலியின் தந்தை.

சுகேது

:

இயக்கன், சரண் என்பவனது மகன். 

சுசேடணன்

:

சுசேஷன். தாரையின் தந்தை. வருணனின் மகன்.

சுதாகன்

:

நூறு வேள்விகளைச் செய்த சூரிய குல வேந்தன்.

சுதீக்கணன்

:

முனிவர்.

சுந்தன்

:

தாடகையின் கணவன். அகத்தியர் சாபத்தால் சாம்பலானவன். 

சுந்தோபசுந்தர்

:

சுந்தன், உபசுந்தன் எனும் உடன்பிறப்பாளர்.

சுபாகு

:

தாடகையின் இரண்டாவது மகன். இராவணனுக்கு
மாமன்.

சுபாரிசன்

:

அரக்கன். அங்கதனால் மாண்டவன். 

சுமதி

:

காசிப முனிவருக்கு விநதையிடம் தோன்றியவள்.
சகரனின் இரண்டாவது மனைவி.

சுமந்திரர்

:

தசரதனின் அமைச்சரும் சாரதியும், நல்ல
ஆலோசனை உடையவர் எனப் பொருள்
படுபவர்.

சுமாலி

:

இராவணன் தாய் கேசகி என்பவளின் தகப்பன்.
சுகேசன் என்னும் அரக்கனின் மகன். மாரீன்,
சுபாகுவிற்கு அடைக்கலம் அளித்தவன்.

சுமத்திரை

:

தசரதனின் இளையதேவி. இலக்குவன் தாய்.