பக்கம் எண் :

 கம்பராமாயணக் கதைப் பாத்திரங்கள்791

சுயம்பிரபை

:

'இயற்கையில் மிக்க ஒளியை உடையவள்' மேரு
சாவர்ணியின் மகன். பில நகரில் வானர வீரர்கள்
கண்ட தவமாது. வானரர்கள் வரவால் சாபம்
நீங்கப் பெற்றுத் துறக்கம் புக்கவள்.  

சுரசை

:

தக்கன் மகள். காசிபன் மனைவி. தேவர் வேண்ட
அனுமனின் பலத்தை அறிய அரக்கியாகிச்
சோதித்தவள்.

சுருதகீர்த்தி

:

சத்துருக்கனனின் மனைவி.

சுரோசனன்

:

சலபோசனின் மகன். தசரதன் அம்பால் உயிர் மாண்டவன்.

சுவாயம்புவமனு

:

பிரமனின் மகன். 

சுனச்சேபன்

:

இரிசிகனின் நடுமகன், அம்பரீடன் செய்த நரமேத
யாகத்திற்காகக் கொடுக்கப்பட்டு, கவுசிக
முனிவரிடம் பெற்ற இரு மந்திரங்களால், யாகமும்
முடிய உயிர் தப்பியவன். 

சூர்ப்பணகை

:

பிரமனின் மகனாகிய புலத்திய முனிவரின்
மகனாகிய விசிரவசுக்கும் இரண்டாம் மனைவி
கேகசிக்கும் பிறந்தவள். கணவன்-வித்யுக்சிருவன்.
தமையன் - இராவணன்.

சூரியன்
பகைஞன்

:

சூரியன் சத்துரு. இராவணன் மந்திரத்தொருவன்.

சூளி

:

முனிவர்.

சோமதை

:

தேவமகள்.

தக்கன்

:

பிரமனின் மகன். சிவபிரானை மதியாது யாகம்
செய்தமையால் சிவபிரானால் அழிக்கப்
பெற்றவன்.

தண்டகன்

:

சூரியகுல வேந்தன். இட்சுவாகுவின் நூறு
மக்களில் கடைப்பட்ட மூடன் என்பதால்
'தண்டன்' எனப் பெயரிடப்பெற்றவன்.

ததிமுகன்

:

மதுவனம் காக்கும் காவலர் தலைவன்.

தம்பன்

:

தம்பம் போன்ற வானரன். 

தயரதன்

:

அயோத்தி வேந்தன். இராமன் தந்தை.

தரீமுகன் 

:

குகை போன்ற முகத்தை உடைய வானரன்.