பக்கம் எண் :

792யுத்த காண்டம் 

தாடகை

:

சுகேதுவின் மகள், அகத்தியரால் சாபம் பெற்ற
அரக்கி. சுந்தன் மனைவி. சுபாகு, மாரீசன்
ஆகியோரின் தாய்.

தாரை

:

வாலியின் மனைவி.

தாரன்
 

:

ருமையின் தந்தை. தேவகுருவாகிய பிரகஸ்பதியின்
புதல்வன்.

தாருகன்
 

:

1. அசுரன் மகளாகிய மாயை என்னும் மறுபெயருள்ள
அரசை என்பவள் காசிப முனிவர் அருளால் பெற்ற
புதல்வர் மூவருள் சூரபதுமனுக்கும் சிங்கமுகனுக்கும்
இளையவன். யானை முகத்தோடு பிறந்தவன்.
2. அரக்கன். அதிகாயனுக்குத் துணையாகச்
சென்றவன்.

தானியமாலை

:

இராவணன் மனைவி. அதிகாயன் தாய்.

திதி

:

காசிபன் மனைவி. புத்திரர் 66 கோடி அசுரர்.

திலோத்தமை

:

தேவநங்கை.

திரிசங்கு
 

:

அயோத்தி வேந்தன். கௌசிக முனிவர் தவ
வலிமையால் இவனுக்கெனத் 'தனி உலகம்'
உருவாக்கப்பட்டுத் 'திரிசங்கு சுவர்க்கம்'
எனப்பட்டது.

திரிசடை

:

வீடணன் மகள்.

திரிசடன்

:

இராமன் காடு செல்கையில் பசு தானம் பெற்ற
அந்தணன்.

திரிசிரன்

:

1. திரிசிரஸ், கரனுடன் வந்த படைவீரன்.
2. இராவணன் புதல்வர்களுள் ஒருவன்.

தீர்க்கபாதன் 
 

:

நீண்ட கால்களை உடையவள். சீதையைக்
குடதிசையில்  தேடச் சென்ற வானர வீரன். 

துந்து

:

ஓர் அரசன்.

துந்துபி

:

எருமைக்கடாவின் வடிவினன். மாயாவியின் உடன்
பிறப்பு. மயன் என்னும் அசுரன் மைந்தன்.
வாலியால் கொல்லப்பட்டு, எலும்பு மலையாகக்
கிடந்தவனை இலக்குவன் கடலில்  வீழச் செய்தான்.

துமிந்தன்

:

தேவ வைத்தியர்களான இரட்டையர் அசுவினி
தேவர்களின் அம்சத்தால் பிறந்த இருவரில் ஒருவன்.

துவிந்தன்

:

வானரப் படைத் தலைவன்.

துர்த்தரன் 

:

பஞ்சசேனாபதிகளுள் ஒருவன்