பக்கம் எண் :

 கம்பராமாயணக் கதைப் பாத்திரங்கள்793

துருவாசர்

:

தன்னை மதியாத இந்திரன் திருவைக் கடலில்
மறைத்தவர்.

துன்முகன்

:

இராவணனுக்கு ஆலோசனை கூறும் படைத்
தலைவன்.  பகைவர்க்குப் பயங்கரமான முகத்தை
உடையவன். அனுமானால் அழிந்தவன்.

தூடணன்

:

யாவரையும் நிந்திப்பவன். இராவணன் தந்தை
விசுரவசு முனிவர்க்கும், தாய் கேகசியின் தங்கை
கும்பீநசிக்கும் பிறந்தவன்.

தூமநாட்டத்தன் 

:

தூமிராட்சன். புகை போன்ற கண்களை
உடையவன். இந்திரசித்தின் தேர்ச்சக்கரக்
காவலாக சென்று போரில், தப்பிவந்து மீண்டும்
போர்க்களம் சென்று மாண்டவன்.

தூமிரன்

:

கரடித் தலைவன். சாம்பவானுக்கு உடன்பிறப்பு.

தேவராந்தகன்

:

தேவர்களுக்கு யமன் போன்றவன். இராவணன்
மைந்தன் அனுமனால் அழிந்தவன்.

நந்தி

:

குரங்குகளால் அழிவு என இராவணனைச்
சபித்தவன்.

நராந்தகன்

:

இராவணன் மைந்தருள் ஒருவன், பகைவர்க்கு
யமன் போன்றவன்.

நளன்

:

விசுவகர்மாவின் மகன். சந்திரன் அமிசமானவன்.
சேது அணை கட்டியவன்.

நாரதர்

:

இசையில் வல்ல முனிவர்.

நிகும்பன்

:

கும்பகர்ணனின் மகன்.

நீலமாலை

:

சீதையின் தோழி. வில் முறித்த செய்தியைச்
சீதைக்கு முதலில் அறிவித்தவள்.

நீலன்

:

அக்கினியின் மைந்தன். நீல நிறமுடையவன்.
வானரப் படைக்கெல்லாம் தலைவன்.

ப்ரகஸன்

:

பஞ்சசேனாபதிகளுள் ஒருவன்.

பகீரதன்

:

அம்சுமானின் மகன். கங்கையை உலகிற்குகக்
கொணர்ந்தவன்.

பதுமுகன்

:

வானரப் படைத்தலைவன்.

பரத்துவாசர்

:

காட்டில் இராம இலக்குவரை உபசரித்த முனிவர்.

பரதன்

:

தசரதன், கைகேயி புதல்வன்.