பக்கம் எண் :

794யுத்த காண்டம் 

பரசுராமன்:

சமதக்னி முனிவரின் மைந்தன். தந்தை
கட்டளைப்படி தாய் இரேணுகாதேவியைக்
கொன்றவன். கார்த்த வீரியார்ச்சுனனை வென்றவன்.

பாசகர்ணன்:

பஞ்சசேனாபதிகளுள் ஒருவன்.

பிசாசன்:

இராவணனுக்கு ஆலோசனை கூறும் படைத்தலைவன்.

பிரகத்தன் :

அரக்கர் படைத்தலைவன். நீலனால் மாண்டவன்.

பிரகலாதன்:

இரணியன் மைந்தன்.

பிரமதத்தா:

குசநாபன் பெற்ற மகளிரை மணந்தவன்.

பிரமன்:

சீதை தீப்புகல் நிகழ்ச்சியின்பின், இராமனது
உண்மை இயல்புகளை உணர்த்தியவர்.

பிரஹஸ்தன்:

அரக்கர் சேனைத்தலைவன்.

பிருது:

தசரதன் முன்னோன்.

பிருகு:

முனிவர்.

புகைநிறக்
கண்ணன்
:

தூமிராட்சன். அரக்கர் படைத்தலைவன்.

புஞ்சிகஸ்தலை:

தேவநங்கை. இராவணன் இவளை வலியப்பற்ற,
அதனால் சினந்த நான்முகன் இராவணனைச்
சபித்தான்.

மகரக்
கண்ணன்
:

மகராட்சன், மகரம் போன்ற கண்களை உடையவன்.
கரன்புதல்வன். இந்திரசித்தின் தேர்ச்சக்கர
காவலாகச் சென்றவன் தப்பி வந்து, மீண்டும் போர்
புரிந்து மாண்டவன்.

மகாபாரிசுவன்:

படைத்தலைவன். அங்கதனால் மாண்டவன்.

மகோதரன்:

இராவணன் படைத்தலைவன்.

மண்டோதரி:

இராவணன் மனைவி. மயன் மகள்.

மத்தன்:

போர் மத்தன். அரக்கன். 

மதங்கமுனிவர்:

'ரிசியமுக மலைக்கு வரின் தலைவெடித்து இறப்பான்'
என வாலிக்குச் சாபமிட்டவர்.

மந்தரை:

கைகேயி தோழி. கூனி.

மயன்:

அசுர சிற்பி.

மயிடன்:

அதிகாயன் இலக்குவனிடம் அனுப்பிய தூதன்.