|
|
உதிர்பூஞ் செம்மலி னொதுங்கினர்
கழிவோர்
முதிர்தேம் பழம்பகை முட்டினு முட்டும்
|
|
உதிர்பூஞ்
செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் - உதிர்ந்த பொலிவினையடைய பழம்பூக்களினின்றும்
ஒதுங்கிச் செல்வோரை, முதிர்தேம் பழம் பகை முட்டினும் முட்டும் - முற்றிய தேனொழுகும்
பலாப்பழங்கள் பகை போலாகி மோதுதலையும் செய்யும் ;
தேம்பழம் - இனிய தெங்கம்பழம் எனலுமாம்.
முட்டினு முட்டுவர் என்பது பாடமாயின் கழிவோர் பழமாகிய பகையினால் தடைப்படினும் படுவர்
என்க. இப் பொருட்குப் பழப்பகை என்பது பாடமாதல் தகும். அரும்பதவுரைகாரர் இப் பாடமே
கொண்டுளார். உம்மை ஐய வும்மை. மேலே மெல்லியற் கொண்டு படர்குவம் எனினே எனக் கூறி
வைத்துப், பின் போற்றா மாக்கட்கு எனவும், ஒதுங்கினர் கழிவோர் எனவும் உலகியலாற்
கூறினார்.. |
|