|
135
|
கொழுங்கொடி யறுகையுங் குவளையுங்
கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்
|
|
கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து - கொழுவிய கொடியாக நீண்ட அறுகையும் குவளையையும்
சேர்த்து, விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டி - விளங்கும் நெற்கதிரோடே தொடுத்த
மாலையை ஏரிலே அணிந்து, பார் உடைப்பனர் போல் - நிலத்தைப் பிளப்பவரைப் போல,
பழிச்சினர் கைதொழ - போற்றுவார் வணங்க, ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும் - ஏரைப்
பூட்டி நின்றோர் பாடுகின்ற ஏர் மங்கலப் பாட்டும் ;
அறுகையும் குவளையையும் கதிரோடு தொடுத்த
விரியல் என்க. இது பொன்னேர் எனவும், சில விடங்களில் நல்லேர் எனவும் கூறப்படும்.
|
|