10. நாடுகாண் காதை



அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்



136
உரை
137

        அரிந்து கால் குவித்தோர் - நெல்லினை அரிந்து ஓரிடத்துக் குவித்தோராய நெல்லரிநர், அரி கடாவுறுத்த பெருஞ் செந் நெல்லின் முகவைப் பாட்டும்--சூட்டினைக் கடாவிடுதலாலுண்டான மிக்க செந்நெல்லினை முகந்து தரும் முகவைப் பாட்டும் ;

        கடாவுறுத்த செந்நெல் என்க. அரி - அறுத்துப் போகட்ட நெற்சூடு. முகவை பாடுதல் - பொலி பாடுதல். நெல் முகந்து கொடுக்கப்படுதலான் முகவையாயிற்று.