மூலம்
7. ஆய்ச்சியர் குரவை
5
வஞ்சஞ் செய்தான் தொழுதனைப் புனலுள்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம் ;
5
உரை
5
"வஞ்சஞ்செய்தான் . . . . யாம்" வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள் நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென்கோ யாம் - காளிந்தி யாற்றினுள் தன்னை வஞ்சித்தானுடைய உள்ளத்தினைக் கவர்ந்தாளது அழகினையே புகழக் கடவேமோ. நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும் வஞ்சம் செய்தான் வடிவு என்கோயாம் - அன்றி, அங்ஙனம் தன் உள்ளத்தினைக் கவர்ந்தாளுடைய அழகினையும் வளையினையும் வௌவிக்கொண்டானுடைய வடிவழகையே புகழ்ந்து கூறுவேமோ ;
நிறை - ஈண்டு அழகு.