7. ஆய்ச்சியர் குரவை

4

நுண்பொறி வெள்ளை யடர்த்தாற்கே யாகுமிப்
பெண்கொடி மாதர்தன் தோள் ;


4
உரை
4

           "நுண்பொறி ..... தோள்" நுண்பொறி வெள்ளை அடர்த் தாற்கே ஆகும் இப் பெண் கொடி மாதர்தன் தோள் - நுண்ணிய புள்ளிகளையுடைய இவ் வெள்ளேற்றினை வலிதொலைத்தானுக்கே இக் கொடிபோன்ற பெண்ணின் காதலிக்கப்படும் தோள்கள் உரியனவாம் ;

வெள்ளை - ஆகுபெயர். பொறி வெள்ளை - மறை எனலுமாகும். மாதர் - காதல். பெண் கொடியாகிய மாதர் என்றலுமாம். தன், சாரியை.