பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1730 

3069 பழுத்த தீம்பல வின்கனி வாழையின்
விழுக்கு லைக்கனி மாங்கனி வீழ்ந்தவை
தொழித்து மந்தி துணங்கை யயர்ந்துதே
னழிக்கு மஞ்சுனை யாடுமொர் பாலெலாம

   (இ - ள்.) பழுத்த தீ பலவின் கனி - பழுத்த இனிய பலவின் கனியும்; வாழையின் விழுக்குலைக் கனி - வாழையின் சிறந்த குலையாகிய கனியும்; மாங்கனி - மாங்கனியுமாக; வீழ்ந்தவை - வீழ்ந்தவற்றைத் (தின்று); மந்தி தொழித்து துணங்கை அயர்ந்து - மந்திகள் ஆரவாரித்துத் துணங்கைக் கூத்தாடி; தேன் அழிக்கும் அம் சுனை ஓர் பால் எலாம் ஆடும் - தேனாகிய வெள்ளம் போய் அழிக்கும் சுனையிலே ஒரு பக்கம் எல்லாம் ஆடும்.

   (வி - ம்.) பல - பலாமரம், விழுக்குலை - சிறந்தகுலை. வீழ்ந்தவை - வினையாலணையும் பெயர். தொழித்து -ஆரவாரித்து, மந்தி - பெண்குரங்கு, துணங்கை - ஒருவகைக் கூத்து.

( 471 )

வேறு

3070 நளிசிலம் பதனி னுச்சி
  நாட்டிய பொன்செய் கந்தி
னொளியொடு சுடர வெம்பி
  யுருத்தெழு கனலி வட்டந்
தெளிகடல் சுடுவ தொத்துத்
  தீயுமிழ் திங்க ணான்கும்
விளிவரு குரைய ஞான
  வேழமேற் கொண்டு நின்றான்.

   (இ - ள்.) நளி சிலம்பதனின் உச்சி - (முற்கூறியவை) செறிந்த குன்றின் உச்சியிலே; விளிவு அரும் ஞான வேழம் மேற்கொண்டு - கெடுதல் இல்லாத ஞானமாகிய வேழத்தை ஊர்ந்து; நாட்டிய பொன் செய் கந்தின் - நாட்டப்பெற்ற பொன்னாலாகிய தூண்போல; உருத்து எழு கனலி வட்டம் - சினந்து எழும் ஞாயிற்றின் வட்டம்; தெளி கடல் சுடுவது ஒத்து - தெளிந்த கடலைச் சுவறப் பண்ணுந் தன்மையை ஓத்து; ஒளியொடு சுடர வெம்பி - ஒளியோடே விளங்கும்படி சினந்து; தீ உமிழ் திங்கள் நான்கும் - நெருப்பைச்சொரியும் திங்கள் நான்கும்; நின்றான் - நின்றான்.

   (வி - ம்.) குரைய : அசை,

   நளி - செறிவு, சிலம்பு - மலை, கந்தின் - தூணைப்போன்று , கனலி வட்டம் - ஞாயிற்று மண்டிலம். சித்திரை வைகாசி ஆனி ஆடி