முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
97

அவன

அவன் அலனோ’. 1“இன்னம் என் கையகத்து ஈங்கு ஒருநாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே” என்று, இதனை உய்ந்தபிள்ளை பாடா நிற்கச்செய்தே, காலாலே உதைப்பது கையாலே தள்ளுவதாய் அபிநயித்துக் காட்டினார். இதனை எம்பார் கேட்டருளி, ‘அங்ஙன் அன்று, அது, பின்னைப்பெற்றானாகில் அவன் நெடுநாள் பிரார்த்தித்துக்கிடந்தது அன்றோ; ஆன பின்னர், அதுவன்று பொருள்’ என்று முகத்தைத் திரிய வைத்துக் காட்டினார். 2“நீ அகல நின்று செய்தவை எல்லாம் உன் சந்நிதியிலே உன்னைச் செய்வேன் என்கிறாள்’ என்று அருளிச்செய்தார். 3எம்பார், புறம்பான விஷயங்களிலே ருசி இல்லாமையாலே பதார்த்த ஞானம் இன்றிக்கே இருப்பர். இப்படி இருக்கையாலே ‘பெண்களுக்கு அசாதாரணமான சிந்நங்கள் எங்ஙனே இருக்கும்படி?’ என்று, சிங்கப்பிரானைக் கேட்டருளினார் என்பது பிரசித்தம். 4இப்படி இருக்கிறவர் தாம் “மின்னிடை மடவார்” என்ற இத்திருவாய்மொழி அருளிச்செய்யப்புக்கால், ‘இந்தச் சந்நியாசி பிரட்டுப் பாடத் தொடங்கினார்’ என்பாராம் பிள்ளையுறங்கா வில்லிதாசர். 5பக்வத் விஷயத்தில் இவருடைய உட்புகுவு இருக்கும்படி. ஒரு க்ஷுத்ர விஷயத்திலே நான்கு நாள்கள் வாசனை பண்ணினவர்கள் போர விதக்தராய் இராநின்றார்கள்; அவ்வளவு அல்ல அன்றோ சமஸ்த கல்யாணகுணாத்மகனோடே நெடுநாள் வாசனை பண்ணினார்க்கு இருக்

 

1. அவர்களால் தள்ளப்படுதலே, கிருதார்த்தனாதற்குக் காரணம் என்று,
  அதற்குச் சம்வாதம் காட்டுகிறார் ‘இன்னம் என்’ என்று தொடங்கி. இப்
  பாசுரம், பெருமாள் திருமொழி, 6 : 8.

2. மேல் வாக்கியத்திற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘நீ அகலநின்று’ என்று
  தொடங்கி.

3. எம்பார்க்கு இப்பொருள் அறிதற்கு விரகு இல்லை என்கைக்காக,
  அவருடைய இதர விஷய வைராக்கியத்தை அருளிச்செய்கிறார் ‘எம்பார்’
  என்று தொடங்கி.

4. இப்படி விரக்தராயிருக்கிறவர், சிருங்காரத்தில் தேர்ச்சியுடையாரைக்
  காட்டிலும், இத் திருவாய்மொழியில் அதிகத்தேர்ச்சியுள்ளவராய்
  அருளிச்செய்யும் வார்த்தைகளுக்குக் காரணத்தை அருளிச்செய்யத்
  தொடங்குகிறார் ‘இப்படி இருக்கிறவர்தாம்’ என்று தொடங்கி.

5. காரணத்தை அருளிச்செய்கிறார் ‘பகவத் விஷயத்தில்’ என்று தொடங்கி.
  உட்புகுந்தால் தெரியுமோ? என்ன, ‘ஒருக்ஷு த்ரவிஷயத்தில்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். விதக்கர் - தேர்ச்சியுள்ளவர்.