பக்கம் எண் :

754
 

சீர்மையுமின்றிக் கொண்ட காதலாகிய பெயருடன் தோன்றும் காமம் கழிந்திடும். அதனால் வரம்பின்றி இடையே நேரும் சாதலும் இல்லை. சிவச்சுடர் ஒளியினுள் தங்கி நூறுகோடியாண் டென்றாலும் வாழ்ந்து அக்காலமெல்லாம் குற்றமறும் நற்றிறப்பொழுதாய்ச் சிறக்கும்.

(17)

1917. காலங் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலங் கடந்தழிந் தான்விந்து செற்றவன்
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பறி யாரே.

(ப. இ.) உலகியலில் மக்கட்கு வரையப்பட்ட காலங்களைக் கடந்து நெடுநாள் வாழ்பவன் விந்துவினை அடக்கி வென்றவனாவன். கால வரையறைக்கு உட்பட்டு மாண்டு ஒழிந்தவர் விந்துவினால் வெல்லப்பட்டுத் தோற்றவராவர். இளமைக்காலத்தில் விந்துவினால் வெல்லப்பட்டு அழகிய பெண்ணைக் கூடினவர்களுக்கு அக் கூட்டப்பயனாய் உயிரை ஒட்டும் தனஞ்செயனாகிய வீங்கற்காற்றுத் தோன்றி வளரும். அவ் வீங்கற்காற்றுத் தம்முயிரைப் போக்குந் தன்மைத்தென்றும் அஃது இணைவிழைச்சால் விளைவதென்றும் உணரார்.

(அ. சி.) விந்து செற்றவன் - விந்துவை அடக்கினவன். விந்து செற்றவன் - விந்துவினால் செயிக்கப்பட்டவன் காலங்களில் - இளமையில். விந்து செற்று உற்ற காரிகை - தான் கூடின பெண். காலின்கண் - தனஞ்செயன் என்னும் வாயு மூலமாக.

(18)

1918. கலக்குநாள் முன்னாள் தன்னிடைக் காதல்
நலத்தக வேண்டில்அந் நாரி யுதரக்
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை
விலக்கு வனசெய்து மேலணை வீரே.

(ப. இ.) காதலால் கருத்தொத்த இருவரும் மருவி வாழ விரும்பினால் கூடுவதற்குத் தகுதியெனக் கருதும் நாளின்முதல்நாளில் காதற்பெரும்பயனும் நன்றாதற் பொருட்டுக் காதலியின் மலக்குடலிற்றங்கும் மலத்தை அகற்றி வாதபித்தம் ஐ என்னும் மூன்றினையும் இருக்க வேண்டிய முறையில் இருக்கச்செய்து நன்முறையாகக் கூடியின்புறுவீராக, அங்ஙனமின்றேல் 465 - ஆம் திருப்பாட்டின்கண் ஓதிய தீங்கு உண்டாகும். ஐ - கபம்.

(அ. சி.) காதல் நலத்தக - காதலால் நலம் உண்டாகவேண்டிய. உதர.....செய்து - முன்னாளிலேயே மலம் போகச்செய்து வாத, பித்த சிலேத்துமங்கள் தம்தம் நிலையில் இருக்கச்செய்து.

(19)

1919. மேலா நிலத்தெழு விந்துவும் நாதமுங்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால்
மாலா னதுமாள மாளுமவ் விந்துவே.

(ப. இ.) மூலம் முதலாகச் சொல்லப்படும். ஆறு நிலைகளுக்கும் அப்பாலுள்ள தூவெளி மேனிலம் எனப்படும். அங்கு விந்துவும் நாதமும்